போகலாம் ரைட்... தமிழகத்தில் ஜுன் 20ம் தேதி முதல் ரயில்கள் இயக்கம்..!

Published : Jun 18, 2021, 06:17 PM IST
போகலாம் ரைட்... தமிழகத்தில் ஜுன் 20ம் தேதி முதல் ரயில்கள் இயக்கம்..!

சுருக்கம்

தமிழகத்தில் வரும் ஜுன 20ம் தேதி முதல் ரத்து செய்யப்பட்டுள்ள 10 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தமிழகத்தில் வரும் ஜுன 20ம் தேதி முதல் ரத்து செய்யப்பட்டுள்ள 10 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்றின் பரவல் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. சுமார் கடந்த ஒரு மாதமாக இறங்குமுகமாகவே இருந்து வரும் சராசரி கொரோனா தொற்று பாதிப்பு, தற்போது 10 ஆயிரத்திற்கும் கீழாக பதிவாகி வருகிறது. இதனால், தமிழகத்தில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்து வருகிறது.

இந்த நிலையில், கொரோனா தொற்று பரவல் குறைந்து வருவதை கருத்தில் கொண்டு, ஜுன் 20ம் தேதி முதல் முதற்கட்டமாக 10 சிறப்பு ரயில்களை இருவழிகளிலும் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. சென்னை எழும்பூர் ரயில்நிலையத்தில் இருந்து தஞ்சை, கொல்லம், ராமேஸ்வரம், திருச்சி உள்ளிட்ட ரயில்நிலையங்களுக்கும், சென்னை சென்ட்ரலில் இருந்து கோவை, ஆலபுலா, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகள் வழியாக இயக்கப்படுகிறது.

PREV
click me!

Recommended Stories

இபிஎஸ்.. ஸ்டாலின்.. விஜய்... யார் முதல்வரானாலும் மக்கள் அந்த கொடூரத்தை அனுபவிப்பார்கள்..! பீதி கிளப்பும் உண்மை..!
திமுக- காங்கிரஸ் செய்த வரலாற்றுப் பிழை.. நடுக்கடலில் தவிக்கும் மீனவர்கள்.. இபிஎஸ் வேதனை!