கட்சிப்பதவியிலிருந்து விடுவிக்கப்படும் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்... திமுக தலைமை முக்கிய முடிவு..?

By Thiraviaraj RMFirst Published Jun 18, 2021, 5:49 PM IST
Highlights

திமுக ஐடி விங் பணியிலிருந்து பிடிஆர் முழுவதுமாக விடுவிக்கப்பட்டு அவரை நிதித்துறையில் முழு கவனம் செலுத்த தலைமை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 

திமுக ஐடி விங் பணியிலிருந்து பிடிஆர் முழுவதுமாக விடுவிக்கப்பட்டு அவரை நிதித்துறையில் முழு கவனம் செலுத்த தலைமை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. திமுக ஐடி விங்கிற்கு வேறு நிர்வாகியை கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறுகிறார்கள்.

திமுகவின் ஐடி விங்கை கவனித்து வருகிறவர் பழனிவேல் தியாகராஜன். அவரது வழிகாட்டுதல் படியே ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக அந்த அணி செயல்பட்டது. ஆனால் நிதி அமைச்சரான பின்பு முழு நேரமும் துறை ரீதியான நடவடிக்கைகளிலேயே ஈடுபட்டுவருகிறார் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன். ஆகையால் அவரால் ஐடி விங் மீது கவனம் செலுத்த முடியவில்லை.

 

தமிழக அரசு நிதி சிக்கலில் இருந்து வருவதால் துறை ரீதியாக தியாகராஜனுக்கு பல சவால்கள் காத்திருக்கின்றன. பட்ஜெட் போட வேண்டிய திட்டங்களும் இருப்பதால் அவர் வகித்த ஐடிவிங் கட்சிப்பதவியிலிருந்து விடுவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அவருக்கு மாற்றாக வேறொரு நிர்வாகி அந்தப்பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. 

click me!