மு.க.ஸ்டாலின் கார் டயருக்கு அடியில் எலுமிச்சையா..? உண்மை நிலவரம் என்ன..?

Published : Jun 18, 2021, 04:30 PM ISTUpdated : Jun 18, 2021, 04:45 PM IST
மு.க.ஸ்டாலின் கார் டயருக்கு அடியில் எலுமிச்சையா..? உண்மை நிலவரம் என்ன..?

சுருக்கம்

டெல்லியில் உள்ள தமிழக இல்லத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தங்கியிருந்தார். அங்கிருந்து பிரதமரை சந்திக்க செல்லும் போது, அவரது கார் டயருக்கு கீழ் எலுமிச்சை இருந்ததாக புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலானது.

தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற பின்னர் முதல் முறையாக அரசு முறை பயணமாக நேற்று டெல்லி சென்றார். தனி விமானம் மூலம் மனைவி துர்கா ஸ்டாலினுடன் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, டி.ஆர்.பாலு, கனிமொழி, தயாநிதி மாறன் உள்பட தி.மு.க. எம்.பி.க்கள் விமான நிலையத்தில் வரவேற்றனர்.

இதையடுத்து மு.க.ஸ்டாலின் மாலை பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். தமிழகத்தின் வளர்ச்சி திட்டங்கள் உள்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பிரதமர் நரேந்திர மோடியிடம், மு.க.ஸ்டாலின் வழங்கினார். டெல்லியில் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல்காந்தியை அவரது இல்லத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து அரசியல் ரீதியாக ஆலோசனை நடத்தினார்.

 

இதனிடையே டெல்லியில் உள்ள தமிழக இல்லத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தங்கியிருந்தார். அங்கிருந்து பிரதமரை சந்திக்க செல்லும் போது, அவரது கார் டயருக்கு கீழ் எலுமிச்சை இருந்ததாக புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலானது. சகுனம், சடங்கு சம்பிராயத்தின் மீதான நம்பிக்கை அடிப்படையில் காருக்கு கீழ் எலுமிச்சை வைப்பதுதான் திமுக பின்பற்றும் பகுத்தறிவா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பினர்.

ஆனால், அது முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் கார் என்றும் அவர் டெல்லி வந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் இது என்றும் செய்தியாளர் ஒருவர் விளக்கம் அளித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

இபிஎஸ்.. ஸ்டாலின்.. விஜய்... யார் முதல்வரானாலும் மக்கள் அந்த கொடூரத்தை அனுபவிப்பார்கள்..! பீதி கிளப்பும் உண்மை..!
திமுக- காங்கிரஸ் செய்த வரலாற்றுப் பிழை.. நடுக்கடலில் தவிக்கும் மீனவர்கள்.. இபிஎஸ் வேதனை!