ஜஸ்ட் ரெண்டு சதவீத வாக்குவங்கிக்கு எதுக்குண்ணே தனிக்கட்சி? சேருங்க தி.மு.க.வோடு!: வைகோவை வெறுப்பேற்றும் உள் கலக குரல்

By Vishnu PriyaFirst Published Sep 18, 2019, 6:08 PM IST
Highlights

இந்த 2019 மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் தோட்டத்தில் உண்மையிலேயே புதிய மறுமலர்ச்சியை கொண்டு வந்துள்ளது. காரணம்? கடந்த சில ஆண்டுகளாக தேர்தல் வெற்றியின் வாசமே இல்லாமல், தோல்வியை மட்டுமே முகர்ந்து கொண்டிருந்த அந்த கட்சிக்கு இந்த  நாடாளுமன்ற தேர்தலின் மூலம் ஒரு லோக்சபா எம்.பி.யும், அதன் பின் ஒரு ராஜ்யசபா எம்.பி.யும் கிடைத்துள்ளார்கள். அதுவும் அந்த ராஜ்யசபா எம்.பி.யானது வைகோ! என்பதுதான் இதில் ஹிட்டு. 

இந்த 2019 மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் தோட்டத்தில் உண்மையிலேயே புதிய மறுமலர்ச்சியை கொண்டு வந்துள்ளது. காரணம்? கடந்த சில ஆண்டுகளாக தேர்தல் வெற்றியின் வாசமே இல்லாமல், தோல்வியை மட்டுமே முகர்ந்து கொண்டிருந்த அந்த கட்சிக்கு இந்த  நாடாளுமன்ற தேர்தலின் மூலம் ஒரு லோக்சபா எம்.பி.யும், அதன் பின் ஒரு ராஜ்யசபா எம்.பி.யும் கிடைத்துள்ளார்கள். அதுவும் அந்த ராஜ்யசபா எம்.பி.யானது வைகோ! என்பதுதான் இதில் ஹிட்டு. 

தங்களுக்கு கிடைத்திருக்கும் இந்த வெற்றிக்கு அடிப்படை காரணம் தி.மு.க.தான், ஸ்டாலின் தான் என்று தொடர்ந்து பதிவு செய்து கொண்டிருக்கிறார் வைகோ. இது ம.தி.மு.க.வினருக்கு ஒரு வித மன சஞ்சலத்தை உருவாக்கியுள்ளது. ‘ம.தி.மு.க.வின் வாக்கு வங்கி கைகொடுத்ததாலும் பல இடங்களில் தி.மு.க. ஜெயித்திருக்கிறது. இதை எங்காவது அவர் குறிப்பிடுகிறாரா? ஏன் நாம் மட்டும் இவ்வளவு இறங்கி, தொழ வேண்டும்?’ என்று குமுறுகிறார்கள். 

இந்த நிலையில், வருடாவருடம் செப்டம்பர் 15 அன்று அண்ணாவின் பிறந்தநாளை மாநாடாக கொண்டாடும் வைகோ, இந்த முறை அதை சென்னையில் நடத்தியதை ‘ஸ்டாலின் கலந்து கொள்ள வசதியாக’ என்று ம.தி.மு.க.வின் உள்ளேயே விமர்சனம் எழுந்தது. அம்மாநாட்டை துவக்கி வைத்து பேசிய ஸ்டாலின், வைகோ தனது போர்வாளாக விளங்க வேண்டும் என்று சூசகமாக சொன்னதும் பஞ்சாயத்து ஆகியிருக்கிறது. இந்த சூழலில் ‘பேசாமல் தி.மு.க.வோடு கழகத்தை இணைச்சுடுங்க.’ எனும் ரீதியில் உட்கட்சிக்குள் சில கோப குரல்கள் கொப்பளிக்க துவங்கியுள்ளதாம். வைகோவின் மனம் இதனால் வருத்தப்பட்டுள்ளதாம். 

புரட்சிப் புயலை வருந்தச் செய்யுமளவுக்கு ஒரு கலக புயல் ஏன்? என்று அக்கட்சியினர் சிலரிடம் கேட்டபோது “வேற என்ன செய்ய சொல்றீங்க? இணைப்பு ஒன்றுதான் மிச்சம், அதையும் செய்துவிடலாம். எங்கள் கழகத்தை துவங்கி பொதுத்தேர்தலை சந்தித்தபோது எட்டு சதவித வாக்கு வங்கி இருந்தது. அதன் பின் அங்கேயுமிங்கேயுமா மாறி மாறி கம்யூனிஸ்டுகள் போல் கூட்டணி வைத்ததால் அந்த வாக்கு வங்கி ஐந்து சதவீதமாக குறைந்தது. தொடர் தோல்விகள், வைகோ பற்றிய சென்டிமெண்ட் விமர்சனங்கள், கட்சியில் புதிய நபர்கள் சேர்க்கையின்மை, கட்சியிலுள்ள சார்பு அணிகள் எதுவும் இயங்காமை என பல நெகடீவ் காரணங்களால் வெறும் ரெண்டு சதவீதமாக எங்களின் வாக்கு வங்கி குறைந்துவிட்டது. இனி மீண்டும் மீண்டெழுவது சாத்தியமே இல்லை. 

இதனால்தான் தி.மு.க.வோடு இணைந்துடுவோம்!னு சிலர் கிண்டலாகவும், பலர் உண்மையான விருப்பத்தோடும் கேட்கிறார்கள். 
தலைவர் வைகோவுக்கு இந்த பேச்சு வருத்தத்தைத்தான் தரும். ஆனாலும் என்ன செய்ய, மக்களுக்கு ஒரு பிரச்னை என்றால் முதல் ஆளாக களத்தில் நிற்பது வைகோதான். ஆனால் தேர்தலில் அவரை தேடித் தேடி தோற்கடிக்கிறார்கள் மக்கள். 
ஆக வேறு வழியில்லை.” என்றார்கள். 
ஓ மை காட்!

click me!