நீதிமன்றம் செல்வோம்; மல்லுகட்டும் பெரம்பூர் வெற்றிவேல்!

First Published Sep 18, 2017, 11:29 AM IST
Highlights
Let go to court - MLA Vetrivel


டி.டி.வி., தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.

எடப்பாடி பழனிசாமிக்கு அளித்து வந்த ஆதரவை டி.டி.வி. ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் ஆளுநரிடம் கடிதம் கொடுத்தனர். 

இது தொடர்பாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம் என்று அரசு கொறடா, சபாநாயகருக்கு பரிந்துரை செய்திருந்தார். இது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு டிடிவி ஆதரவு எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அளித்திருந்தார்.

இந்த நிலையில், டிடிவி தினரனுக்கு ஆதரவு அளித்து வந்த எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவதாக சபாநாயகர் தனபால் சார்பில் சட்டப்பேரவை செயலாளர் பூபதி வெளியிட்டுள்ளார்.

சபாநாயகரின் இந்த அறிவிப்பு தொடர்பாக, டிடிவி ஆதரவு எம்எல்ஏ வெற்றிவேல், தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது தொடர்பாக நீதிமன்றத்துக்கு செல்வோம் என்றார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததால், டிடிவி ஆதரவு எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக அவர் குற்றம் சாட்டினார்.
அரசு கொறடா உத்தரவு சட்டப்பேரவைக்குள் மட்டுமே செல்லும் என்றும் எம்எல்ஏ வெற்றிவேல் கூறினார்.

இது தொடர்பாக பேசிய, கர்நாடக மாநில செயலாளர் புகழேந்தி, நிர்பந்தம் காரணமாகவே 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

click me!