எஸ்.வி சேகர் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து சட்ட ஆலோசனை: சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் அதிரடி.

By Ezhilarasan BabuFirst Published Aug 13, 2020, 10:29 AM IST
Highlights

சுதந்திர தின விழாவை முன்னிட்டு சென்னையில் 15 ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.

சுதந்திர தின விழாவை முன்னிட்டு சென்னையில் 15 ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதான வளாகத்தில் காவல் ஆளிநர்களின் பயன்பாட்டிற்காக புதிதாக அமைக்கப்பட்ட ஆவின் பாலகத்தை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ்குமார் அகர்வால் திறந்து வைத்து பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்:-

இந்த வாரம் சுதந்திரதின விழா கொண்டாடப்பட உள்ள நிலையில் அதற்கான பாதுகாப்பு பணிகள் ஏற்கனவே தொடங்கி நடைபெற்று வருவதாக கூறினார்.சுதந்திர தினத்தன்று சென்னையில் மட்டும் 15,000 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக தகவல் தெரிவித்தார். சுகந்திர விழா நிகழ்வில் சமூக இடைவெளி பின்பற்றும் வகையில் குறைந்த அளவிலான நபர்களையே விழாவிற்க்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளனர் என்றும், பொதுமக்கள் தங்களுடைய வீடுகளில் இருந்தே சுதந்திர தின விழா நிகழ்ச்சிகளை பார்க்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 

சென்னை காவல் ஆணையர் அலுவகத்தில் சைபர் க்ரைம் புகார்களுக்கு மட்டும் தனியாக ஒரு பிரிவு அமைக்க தேவையான உபகரணங்கள் தயார் நிலையில் உள்ளதாகவும், விரைவில் இதற்காக பணிகள் துவங்கப்படும் என்று கூறினார்.எஸ். வி.சேகர், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் தேசியக்கொடி குறித்து அவதூறு பேசியது மீதான புகார் குறித்து விளக்கம் அளித்த அவர், இதுகுறித்து சட்ட ஆலோசனை கேட்கப்பட்டுள்ளதாகவும் ஆலோசனை முடிந்த பின்பு அதன் மீதான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.


 

click me!