பிரணாப் முகர்ஜி இறந்து விட்டாரா..? ட்ரெண்டாகும் #ripPranabMukherjee

Published : Aug 13, 2020, 10:20 AM IST
பிரணாப் முகர்ஜி இறந்து விட்டாரா..? ட்ரெண்டாகும் #ripPranabMukherjee

சுருக்கம்

எனது தந்தை பிரணாப் முகர்ஜி உயிரோடுதான் இருக்கிறார். யாரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என அவரது மகன் அபிஜித் முகர்ஜி தெரிவித்துள்ளார்.  

எனது தந்தை பிரணாப் முகர்ஜி உயிரோடுதான் இருக்கிறார். யாரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என அவரது மகன் அபிஜித் முகர்ஜி தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு மூளையில் உள்ள ரத்தக்கட்டியை நீக்குவதற்கு அறுவை சிகிச்சை நடைபெற்றது. அதன்பிறகு டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் வென்டிலெட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக ராணுவ மருத்துவமனை சார்பில் இரண்டு மூன்று அறிக்கை வெளியிடப்பட்டன.

இந்நிலையில் இன்று காலை சமூக வலைதளப்பக்கங்களில் #ripPranabMukherjee என் ஹேஸ்டேக் டிரெண்டாகி வந்தது. இதனால் பிரணாப் முகர்ஜி உடல்நலம் குறித்த செய்திகள் பரவத் தொடங்கியது. இந்நிலையில் எனது தந்தை இன்னும் உயிரோடுதான் இருக்கிறார். வதந்திகளை நம்பாதீர்கள் என பிரணாப் முகர்ஜியின் மகன் கேட்டுக் கொண்டுள்ளார்.  ஆனாலும் பிரணாப் முகர்ஜி உடல்நலம் தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

நேருக்கு நேர் வணக்கம் வைத்துக்கொண்ட அன்புமணி- ஜி.கே. மணி...! விரைவில் ஒன்று சேர வாய்ப்பு
ஒன்றியம்.. ஒன்றியம்னு சொல்லிட்டு..! இப்போ பாரத ரத்னா மட்டும் இனிக்குதா? வளர்மதி பயங்கர கேள்வி