லீனா மணிமேகலை தற்போது இயக்கியுள்ள காளி என்ற ஆவணப்படத்தின் போஸ்டரை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கியுள்ளார். அதில், போஸ்டரில் காளி வேடத்தில் இருக்கும் பெண் ஒருவர் வாயில் சிகரெட் புகைப்பது போன்றும், கையில் எல்ஜிபிடி சமூகத்தின் கொடியை ஏந்தி இருப்பது போன்றும் போஸ்டரில் இடம்பெற்றிருந்தது.
இந்துக்களின் கடவுள் மாதா காளியை இழிவு படுத்தியுள்ள லீனா மணிமேகலை உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா கூறியுள்ளார்.
தமிழ் திரையுலகில் பல ஆவணப்படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமடைந்தவர் லீனா மணிமேகலை. இவர் இயக்கிய ஆவணப்படங்களுக்கு பல விருதுகளை பெற்றுள்ளன. இவரின் பறை, தேவதைகள், பலிபீடம் போன்ற பல ஆவணப்படங்கள் பலரின் பாராட்டுக்களையும் பெற்றது. ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் எதிர்கொள்ளும் சாதிய ஒடுக்குமுறை பற்றி இவர் இயக்கிய மாடத்தி திரைப்படம் சமீபத்தில் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இப்படம் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு பல விருதுகளையும் வென்றது. கவிஞராகவும், எழுத்தாளராகவும் அறியப்படும் இவர் சாதிய ஒடுக்குமுறைகள், பெண்களுக்கான உரிமைகள், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறித்து பல கவிதைகளை எழுதியுள்ளார்.
இதையும் படிங்க;- கையில் LGBT கொடி... வாயில் சிகரெட் உடன் ‘காளி’ - லீனா மணிமேகலையின் ஆவண பட போஸ்டரால் வெடித்த சர்ச்சை
லீனா மணிமேகலை தற்போது இயக்கியுள்ள காளி என்ற ஆவணப்படத்தின் போஸ்டரை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கியுள்ளார். அதில், போஸ்டரில் காளி வேடத்தில் இருக்கும் பெண் ஒருவர் வாயில் சிகரெட் புகைப்பது போன்றும், கையில் எல்ஜிபிடி சமூகத்தின் கொடியை ஏந்தி இருப்பது போன்றும் போஸ்டரில் இடம்பெற்றிருந்தது.
இந்து கடவுளை அவமதிக்கும் வகையில் இந்த போஸ்டர் இருப்பதாக கூறி இந்து முன்னணியினர் மற்றும் பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். டுவிட்டரில் #ArrestLeenaManimekalai என்கிற ஹேஷ்டேக்கும் டிரெண்டாகி வருகிறது. இந்நிலையில், பாஜக மூத்த தலைவர் இந்துக்களின் கடவுள் மாதா காளியை இழிவு படுத்தியுள்ள லீனா மணிமேகலை உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் என கூறியுள்ளார்.
இதையும் படிங்க;- டொராண்டோ கண்காட்சியில் இருந்து காளி போஸ்டரை அகற்றுங்கள்… கனடாவில் உள்ள இந்திய தூதரகம் அதிரடி!!
இதுதொடர்பாக பாஜக முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா வௌியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- இந்துக்களின் கடவுள் மாதா காளியை இழிவு படுத்தியுள்ள லீமா மணிமேகலை உடனடியாக கைது செய்யப்பட வேண்டும். தொலைகாட்சி விவாதத்தில் சிவபெருமானை முஸ்லீம் மதவெறியன் பேசியதை தொடர்ந்து தற்போது இந்துமதத்திற்கு எதிராக கிறித்துவ தாக்குதல் நடந்துள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது என தெரிவித்துள்ளது.