25 லட்சம் முதல் 5 கோடி பணம்.. எடப்பாடி பழனிசாமிக்கு பயம் தெரியுமா? பொளந்து கட்டிய டிடிவி தினகரன்

By Raghupati RFirst Published Jul 4, 2022, 10:00 PM IST
Highlights

மாவட்ட செயலாளர் அவர்களுக்கு பணம் கொடுத்ததாக டிடிவி தினகரன் இன்னொரு முறை கூறினால் அவருக்கு மீது மான  நஷ்ட ஈடு வழக்கு தொடுக்கப்படும்’ என்று கடுமையாக விமர்சித்தார்.

அதிமுக விவகாரம் 

இன்று செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி ஆதரவாளரான கே.பி முனுசாமி, 'திட்டமிட்டபடி அதிமுக பொதுக்குழு கண்டிப்பாக நடக்கும் இதை யாரும் தடுக்க முடியாது. இபிஎஸ் கண்டிப்பாக பொதுச்செயலாளராக பதவி ஏற்பார். கட்சியில் உண்மையாக உழைக்கின்றவர்களை இயக்கத்தின் மீது பாசமும் பற்றும் கொண்டிருப்பவர்களை யாராலும் பிரிக்க முடியாது கட்சியிலிருந்து வெளியேற்றவும் முடியாது. 

எடப்பாடி பழனிசாமி

மாவட்ட செயலாளர் அவர்களுக்கு பணம் கொடுத்ததாக டிடிவி தினகரன் இன்னொரு முறை கூறினால் அவருக்கு மீது மான  நஷ்ட ஈடு வழக்கு தொடுக்கப்படும்’ என்று கடுமையாக விமர்சித்தார். இதற்கு பதில் அளிக்கும் விதமாக இன்று செய்தியாளர்களை சந்தித்து எடப்பாடி பழனிசாமி தரப்பை கடுமையாக தாக்கி பேசியுள்ளார் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன். 

மேலும் செய்திகளுக்கு.. மேயர் முதல் வார்டு உறுப்பினர்கள் வரை.. ஒழுங்கா இருக்கணும் - வார்னிங் கொடுத்த மு.க ஸ்டாலின் !

டிடிவி தினகரன்

அப்போது, ‘அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “அதிமுக கட்சியின் அடிப்படையிலான உறுப்பினர் தான் பொதுச் செயலாளர் பதவியை தேர்ந்தெடுக்க முடியும். இதை  எந்த காலத்திலும் மாற்ற முடியாது என்று தான் கட்சியில் விதி கொண்டுவரப்பட்டது. தற்போது அந்த அதிமுக கட்சியில் 3000 பேர் நிர்வாகிகள் என்ற பெயரில் எடப்பாடி பழனிச்சாமியின் பினாமிகள் தேர்தல் என்ற பெயரில் தவறுகள் செய்து வருகிறார்கள். 

இதற்கு பன்னீர்செல்வம் ஒப்புக்கொண்டது தான் தவறான செயல், நேர்மையான முறையில் தேர்தல் நடத்தவில்லை என்று குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. அதிமுகவில் 98 சதவீதம் ஆதரவாளர்கள் உள்ளதாக கூறும் எடப்பாடி பழனிச்சாமி, ஏன் பயந்து கொள்ள வேண்டும். ஏன் தேர்தல் உடனடியாக நடத்த முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார் ?

மேலும் செய்திகளுக்கு.. அதிமுகவிடம் கோடி கணக்கில் பணம் இருக்கு.. கொள்கை தான் இல்லை - அதிமுகவை கலாய்த்த சீமான்

அதிமுக பொதுக்குழு

மீண்டும் பொதுக்குழுவைக் கூட்டி, சட்டத்தின் ஓட்டைகளில் 3,000 பேர் வைத்துக் கொண்டு பொதுக்குழுவில் ஒற்றை தலைமையோ அல்லது பொதுச் செயலாளராகவோ பதவியேற்று குறுக்குவழியில் அமர பார்க்கிறார். தமிழக சட்டமன்றத் தேர்தலில் பல ஆயிரம் கோடி செலவு செய்துதான் மேற்கு மண்டலத்தில் அதிமுக வெற்றி பெற்றனர். 

தற்போது சொந்த நகராட்சியில் கூட வெற்றி பெறமுடியவில்லை, ஏனென்றால் அதைவிட அதிகளவில் திமுக செலவு செய்துள்ளது. மேலும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பணம் ஒரு அளவிற்கு தான் வேலை செய்யும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. அதிமுக பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களுக்கு 25 லட்சம் முதல் ஐந்து கோடி வரை பணம் கொடுக்கப்பட்டுள்ளது’ என்று கடுமையாக தாக்கி பேசினார்.

மேலும் செய்திகளுக்கு.. கிரிவலப்பாதையில் கருணாநிதி சிலையா? எ.வ வேலு காலேஜ்ல வைங்க பார்க்கலாம் - எச்.ராஜா கொந்தளிப்பு

click me!