
எம்.ஜி.ஆர்., சகோதரர் சக்கரபாணியின் மகளும் எம்ஜிஆருக்கு கிட்னி தானம் அளித்த லீலாவதியும், அவரது மகன் பிரவீனும் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் பா.ஜ. க.வில் இணைந்தனர்.
பின்னர் எம்ஜிஆர் சமாதிக்கு வந்த அவர்கள் பேட்டி அளித்தனர். அப்போது பிரவீன் கூறியதாவது:
பிரவீன் மோடி பிரதமராக நேர்மையாக இருக்கிறார் , நேர்மையாக ஆட்சி செய்கிறார் , சிறந்த தலைவராக இருக்கிறார். எம்ஜிஆரே இருந்திருந்தால் மோடியைத்தான் ஆதரித்திருப்பார். ஆகவே நான் அவரை ஆதரிக்கிறேன் , பாஜகவில் என்னை இணைத்துகொள்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.