
கமல், ரஜினி மற்றும் விஜய் இந்த மூன்று மெகா ஸ்டார்களின் திரைப்படங்கள் ஒரே நாளில் ரிலீஸானாலே அல்லு தெறிக்கும். நினைத்துப் பார்க்கவே முடியாத மாஸ் கற்பனை அது.
இந்நிலையில், இந்த மூன்று பேருமே முதல்வர் பதவியை மனதில் வைத்து அரசியலுக்கு வர நினைப்பது எந்தளவுக்கு சென்சேஷனலான விஷயம்! அரசியலுக்குள், கமல் கிட்டத்தட்ட வந்துவிட்டார், ரஜினி வரப்போகிறார், விஜய்யும் வருவார்! என்று சொல்லப்படும் நிலையில் இந்த மூன்று பேரில் யாருக்கு மாஸ்? மக்கள் மனசுல யாரு இருக்காங்க? பொதுவாக சினிமா ஹீரோக்கள் அரசியலை நோக்கி நகர்வதை மக்கள் எப்படி பார்க்கிறார்கள்? என்பது உள்ளிட்ட சில கேள்விகளை வைத்து ஒரு சர்வே நடத்தப்பட்டிருக்கிறது.
அதன் தெறி முடிவுகள் இதோ...
* சினிமாவிலிருந்து தமிழகத்தை ஆள இன்னொரு முதல்வர் வருவாரா?
ஆம் - 31.6%, இல்லை - 20.2%, உறுதியாக கூற முடியாது - 27.8%, வேண்டவே வேண்டாம் - 21.2%
* அ.தி.மு.க.வுக்கு சவாலாக இருக்கப்போகும் நடிகர் யார்?
கமல் - 45.3%, ரஜினி - 18.2%, விஜய் - 14.5%
* தி.மு.க.வுக்கு சவாலாக இருக்கப்போகும் நடிகர் யார்?
கமல் - 35.5%, ரஜினி - 22.8%, விஜய் - 16.5%
* நடிகர்கள் கட்சி துவங்கினால் யாருக்கு சவாலாக இருப்பார்கள்?
ஸ்டாலின் - 36.4%, எடப்பாடி - 26.0%, தினகரன், - 5.1%,
* ரஜினி யாருடன் கூட்டணி வைத்தால் வெற்றி?
தி.மு.க. - 41.5%, அ.தி.மு.க. - 21.3%, பி.ஜே.பி. - 15.9%
* கமல் யாருடன் கூட்டணி வைத்தால் வெற்றி?
தி.மு.க. - 47.7%,
* விஜய் யாருடன் கூட்டணி வைத்தால் வெற்றி?
தி.மு.க. - 41.0% , அ.தி.மு.க. - 20.2%,
...இப்படி நீள்கின்றன அந்த பரபர சர்வே வெளியிட்டிருக்கும் பாதி முடிவுகள்.