
கூவத்தூர் விவகாரம் குறித்து சட்டப் பேரவையில் விவாதிக்க தனபால் அனுமதி அளிக்காததைத் தொடந்து கடும் அமளியில் ஈடுபட்ட திமுகவினர் பேரவையில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட ஸ்டாலின், துரை முருகன் உள்ளிட்ட திமுக உறுப்பினர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.
பரபரப்பான அரசியல் சூழலில் இன்று காலை கூடிய தமிழக சட்டசபையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடத்தப்படாமலேயே பட்ஜெட் கூட்டத் தொடர் முடிவு பெற்றது.
கூவத்தூர் குதிரை பேரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று ஸ்டாலின் கோரிக்கை வைத்தார். அதற்கு சபாநாயகர் தனபால் அனுமதி மறுத்ததால் "எம்எல்ஏ-க்கள் விற்பனைக்கு MLAForSale என்ற பதாகைகளை திமுக எம்எல்ஏ-க்கள் அமளியில் ஈடுபட்டதால் அங்கு பெரும் பதற்றம் நிலவியது.
இதனையடுத்து ஸ்டாலின் உள்ளிட்ட திமுக உறுப்பினர்களை வாயிலிருந்து வெளியேற்ற சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார்.
வெளியேற்றப்பட்ட திமுக உறுப்பினர்கள் சட்டசபை எதிரே உள்ள ராஜாஜி சாலையில் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து கடுமையாக பாதித்ததால் தலைவர் ஸ்டாலின் உள்பட அனைத்து திமுகவினரும் கைது செய்து போலீஸ் வேனில் ஏற்றப்பட்டனர்.