
கூவத்தூரில் எம்எல்ஏக்கள் விலை பேசப்பட்டது குறித்து விவாதிக்க சட்டமன்ற திமுக தலைவர் ஸ்டாலின் எழுப்பிய கோரிக்கையை சபாநாயகர் நிராகரித்ததையடுத்து கடும் அமளி ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து MLA FOR SALE என்ற பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழக சட்டப்பேரவை இன்று தொடங்கியதும் 6 முன்னாள் எம்எல்ஏக்கள் மறைவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது இதைத்த தொடர்ந்து எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின், ஓபிஎஸ் அணியில் இருக்கும் எம்.எல்.ஏ சரவணன், கூவத்தூரில் பேரம் பேசப்பட்டதாக கூறிய வீடியோ அண்மையில் வெளியானத குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தினார்.
ஆனால் சபாநாயகர் தனபால், இந்த கோரிக்கையை நிராகரித்தார்.மேலும் இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் விவாதிக்க முடியாது என மறுத்துவிட்டார்.
இதையடுத்து திமுகவின் கடும் அனளில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்த அங்கு பதற்றம் ஏற்பட்டது. திமுக உறுப்பினர்கள் தொடர்ந்து வலியுறுத்தியதை அடுத்து தகுந்த ஆதாரங்களை தந்தால், இவ்விவகாரம் குறித்து விவாதிக்க அனுமதி அளிக்கப்படும் என தனபால் தெரிவித்தார்.
ஆனால் பத்திரிகை, தொலைக்காட்சி செய்திகளை வைத்து விவாதம் நடத்த முடியாது என சபாநாயகர் தனபால் மறுத்ததையடுத்த திமுக உறுப்பினர்கள் சட்டப் பேரவைக்குள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது திமுக உறுப்பினர்கள் MLA FOR SALE என்ற பதாகைகளை ஏந்திய படி ஆர்ப்பாட்டம் நடத்தினர். தொடர்ந்து அவர்கள் முழக்கம் எழுப்பி வருவதால் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.
இதைத் தொடர்ந்து சட்டப் பேரவையில் இருந்து திமுக உறுப்பினர்களை வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டார். இதையடுத்து திமுக உறுப்பினர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர்..