
நடிகர் கமலஹாசன் துவங்கிய 'மக்கள் நீதி மய்யம்' கட்சி தொடங்கிய போது, முக்கிய பிரமுகர்களாக உயர்மட்டக்குழுவில் நியமிக்கப்பட்டவர்களில் ஒருவர் வழக்கறிஞர் ராஜசேகர்.
மேலும் நடிகை ஸ்ரீபிரியா, நாசரின் மனைவி கமீலா உட்பட 16 பேர் இதில் நியமிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஒரு சில கருத்து வேறுபாடு காரணமாக, வழக்கறிஞர் ராஜசேகர் கட்சியில் இருந்து விலகுவதாக பகிரங்கமாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், கடந்த ஆறு மாதங்களாக கட்சி உருவாக பாடுபட்டேன், ஆனால் தன்னுடைய வழக்கறிஞர் தொழிலை செய்யமுடியாத காரணத்தால் தான் விலகுவதாக கூறினார்