சிரிப்பலையில் மூழ்கிய சட்டப்பேரவை - நிதியமைச்சர் செய்த காமெடி டைம்

Asianet News Tamil  
Published : Mar 16, 2017, 01:01 PM ISTUpdated : Sep 19, 2018, 02:42 AM IST
சிரிப்பலையில் மூழ்கிய சட்டப்பேரவை - நிதியமைச்சர் செய்த காமெடி டைம்

சுருக்கம்

Laughter drowned in the assembly

சட்டப்பேரவையில், 2017ம் ஆண்டுக்கான பட்ஜெட் அறிக்கையை வாசித்து கொண்டிருந்தார். சாதாரண நிலையில் வாசித்து கொண்டிருந்த அவர், திடீரென வேகத்துடன் படித்து கொண்டே சென்றார்.
இதை பார்த்ததும், அவையில் இருந்த அனைத்து உறுப்பினர்களும், சற்று உரையை உற்று நோக்கினர். அறிவிப்புகளை அசுர வேகத்தில் படித்து கொண்டிருந்த அமைச்சர் ஜெயகுமார், திடீரென “நான் இப்படியே வாசிக்கட்டுமா” என கேள்வி எழுப்பினார்.

அதனை கேட்ட உறுப்பினர்கள் சிலர் வேகமாக வாசிக்கும்படியும், சிலர் மெதுவாக வாசிக்கும்படியும் கூறினர். அதற்கு, உறுப்பினர்களுக்கு ஒரு சுவாரஸ்யம் கொடுக்க வேண்டும் என நினைத்தேன். அதற்காக வாசித்தேன்” என்றார். இதை கேட்டதும், அனைவரும் சிரித்தனர். பிறகு தனது பாணியில் பெட்ஜெட்டை உரையை மீண்டும் தொடங்கினார்.

* தருமபுரியில் ஒரு உணவுப் பொருள் குழுமம் வழங்கப்படும்.
* குறைந்த வட்டியில் கடன் வழங்க தொழில்துறைக்கு ரூ.1,950 கோடி ஒதுக்கீடு.
* காஞ்சிபுரம் மற்றும் கரூரில் தலா ஒரு ஜவுளி குழுமம் அமைக்கப்படும்.
* ராமேஸ்வரத்தில் கடல் உணவுப் பொருள்கள் குழுமம் அமைக்கப்படும்.
* இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டு சேதமடைந்த 18 மீனவ படகுகளுக்கு தலா ரூ. 5 லட்சம் ஒதுக்கீடு.
* சோழிங்கநல்லூரில் புதிய தொழில்நுட்ப பூங்கா.
* தொழில் துவங்குவதற்கான ஒற்றைச் சாளர முறை மேலும் வலுப்படுத்தப்படும்.
* கோயில்களில் வழங்கப்படும் அன்னதானம் திட்டம் தொடர்ந்து வழங்கப்படும்.
* காஞ்சிபுரத்தில் ரூ.130 கோடி செலவில் 330 ஏக்கர் பரப்பளவில் மருத்துவப் பூங்கா அமைக்கப்படும்
* 1,000 கிராமப்புற கோயில்களை புதுப்பிக்க ரூ 1 லட்சம் செலவில் கிராம கோயில் புதுப்பிக்கப்படும்.
இவ்வாறு நிதியமைச்சர் ஜெயகுமார் அறிக்கையை வாசித்து கொண்டிருந்தார்.

இன்று பட்ஜெட் அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது என்றதும், அனைத்து தரப்பினரும் டிவியின் முன் உட்கார்ந்து, சட்டப்பேரவை நிகழ்ச்சிகளை பார்க்க தொடங்கினர்.
வழக்கமாக சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கலின்போது, கூச்சலும் குழப்பமும் அமளியும் ஏற்படுவது வழக்கம். ஆனால், இன்று நடந்த சட்டப்பேரவை நிகழ்ச்சியில் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்காமலும், அமளியில் ஈடுபடாமல் இருந்தது ஆச்சர்யமாக இருந்தது.

PREV
click me!

Recommended Stories

TVK Government : இவருக்கு கோபம் வந்தால் தவெக ஆட்சி கவிழுமாம்! யார் தெரியுமா?
Jana Nayagan: ஜனநாயகன் படத்தை சரசரவென வெட்டித்தள்ளிய சென்சார்.?! நீக்கப்பட்ட 12 முக்கிய காட்சிகள் என்னென்ன?