
தமிழக அரசின் 2017ம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இதில், மீனவர்களுக்கான டீசல் மானியம் 18 ஆயிரம் லிட்டராக உயர்ந்துள்ளது. மேலும், மீன்பிடி தடை காலத்தில், ரூ.5 ஆயிரம் உதவி தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
* மீனவர்களுக்கான மானிய டீசல் 15,000 லிட்டரில் இருந்து 18,000 லிட்டராக உயர்வு
* விலையில்லா கால்நடை வழங்க ரூ.182 கோடி
* நெல்லுக்கு கூடுதல் ஆதார விலை வழங்க ரூ.200 கோடி
* ஆவின் பொருட்களை பிரபலப்படுத்த 200 புதிய பாலகங்கள்
* நெல்லுக்கு கூடுதல் ஆதார விலை வழங்க ரூ.200 கோடி
* விலையில்லா கால்நடை வழங்க ரூ.182 கோடி
* 35 ஆயிரம் ஏக்கரில் கரும்பு சாகுபடி
* மீன்வளத்துறை க்கு 860 கோடி
* ரேஷன் கடையில் மானிய விலையில் பொருட்கள் தொடர்ந்து வழங்கப்படும்
* கல்லூரி விடுதி மாணவர்களுக்கான உணவுப்படி ரூ.875லிருந்து ரூ.1000 ஆக உயர்வு.
* மீன்பிடி தடைக்காலத்தில் மீனவர்களுக்கு உதவித்தொகை ரூ.5000 வழங்கப்படும்.
* காங்கேயம், பர்கூர் உள்ளிட்ட நாட்டுமாடுகளை பாதுகாக்க அரசு நிதிஉதவி வழங்கும்.
* கடல் அரிப்பை தடுக்க ரூ.20 கோடியில் திட்டம்
* இயந்திர மீன்பிடி படகுகளுக்கு வழங்கும் டீசல் 18 ஆயிரம் லிட்டராக உயர்வு
இதன் மூலம், அரசுக்கு கடன் சுமை ரூ.1 லட்சம் கோடி அதிகரிப்பு ஏற்படும். நிதி பற்றாக்குறை ரூ.41 ஆயிரம் கோடி உள்ளது என நிதியமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்.