2017ம் ஆண்டின் பட்ஜெட் அம்சங்கள் - விவசாயிகளுக்கு ரூ.7000 கோடி பயிர் கடன்

Asianet News Tamil  
Published : Mar 16, 2017, 11:49 AM ISTUpdated : Sep 19, 2018, 02:42 AM IST
2017ம் ஆண்டின் பட்ஜெட் அம்சங்கள் - விவசாயிகளுக்கு ரூ.7000 கோடி பயிர் கடன்

சுருக்கம்

Features of the budget for the year 2017 - Rs 7000 crore crop loans to farmers

தமிழக 2017ம் ஆண்டுக்கான பட்ஜெட் அறிக்கையை நிதியமைச்சர் ஜெயகுமார் வாசித்து கொண்டு இருக்கிறார்.
2017ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டின் அம்சங்கள்


* பால்வளத்துறைக்கு ரூ.130 கோடி, மீன்வளத்துறைக்கு ரூ.768 கோடி ஒதுக்கீடு. நீராதார மேலாண்மை, வறுமை ஒழிப்பு தூய்மை தமிழ்நாடு ஏழைகளுக்கு வீட்டுவசதி உள்ளிட்ட நோக்கங்கள் அடிப்படையில் நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

* கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு ரூ.7000 கோடி பயிர்க்கடன் வழங்க நடவடிக்கை. இதன் மூலம், 2018ம் ஆண்டில் தமிழக அரசின் கடன் ரூ.3,16,366 கோடியாக இருக்கும்.

* 164 தேர்தல் வாக்குறுதிகள் ஏற்கெனவே நிறைவேற்றப்பட்டுள்ளன. மேலும் 55 தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

* வளர்ச்சி நிதியிலிருந்து இதுவரை 472 திட்டங்களை, ரூ.282.22 கோடியில் செயல்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான நிதி இரட்டிப்பாக்கப்படும். அதில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு 100ல் இருந்து 150 எனவும், தேர்ச்சி பெற்றவர்களுக்கு 150ல் இருந்து 300 எனவும் உயர்த்தப்படும்.

* வர்தா புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்வதற்கு மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ.585 கோடி வழங்கப்பட்டுள்ளது.

* நீர்வள ஆதார துறைக்கு ரூ.4,791 கோடி, சுற்றுசூழல் வனத்துறைக்கு ரூ.587 கோடி, போக்குவரத்து துறைக்கு ரூ.2,192 கோடி, குடிநீர் பற்றாக்குறைக்கு ரூ.615 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

AIADMK Split 2026: இபிஎஸ் vs எஸ்.பி வேலுமணி.! மீண்டும் பிளவுபட்ட அதிமுக.! கட்சி இனி யார் வசம் செல்லும்?
TVK VIJAY: பெரும்பான்மை கொடுத்த தைரியம்.! போலீசாருக்கு முழு அதிகாரம்.! ஜெயலலிதா பாணியில் அடித்து விளையாட போகும் முதல்வர் விஜய்.!