குரங்குகளின் கையில் பூமாலை! நம்பிக்கையை சிதைத்த துரோகிகள்: அசிங்கப்பட்டு, சிரிப்பாய் சிரிக்கப்படும் அ.தி.மு.க. 

First Published Mar 20, 2018, 9:21 AM IST
Highlights
laughing at AIADMK


அ.தி.மு.க.விலிருந்து கட்டங்கட்டி கழட்டிவிடப்பட்ட மாஜி எம்.பி.யான கே.சி. பழனிசாமி, காங்கயம் காளையாக முறுக்கிக் கொண்டுதான் நிற்கிறார்.

பி.ஜே.பி.யின் வார்த்தைகளுக்கு அடிபணிந்து தன்னை கட்சியிலிருந்து நீக்கியதற்காக பதிலடி கொடுத்தே தீருவது, பன்னீரையும் பழனிசாமியையும் மண்டை காய வைத்தே தீருவது என்று கங்கணம் கட்டிக் கொண்டு களமிறங்கியிருக்கிறார். 

சிங்கிள் பட்டாசா இருந்த கே.சி.பி.யுடன் நேற்று கோயமுத்தூரில் மாஜி எம்.எல்.ஏ. சின்னசாமியும் கைகோர்த்திருக்கிறார். அகில இந்திய அண்ணா தொழிற்சங்க செயலாளர் பதவியிலிருந்து சில நாட்களுக்கு முன் கழட்டிவிடப்பட்ட கோபத்திலிருந்த அவர் இந்த முடிவை எடுத்து, கே.சி.பி.யுடன் கைகோர்த்திருக்கிறார். 

இவர்கள் இருவரும் கூட்டாக நேற்று கோயமுத்தூரில் பேசுகையில் அ.தி.மு.க.வின் தன்மானத்தை தவிடு பொடியாக்கியுள்ளனர். 

”குரங்கு கையில் பூமாலை போலாகிவிட்டது எங்கள் கட்சி. உறுப்பிணர் சேர்க்கை படிவத்தில் கூட சில சிக்கல்களை உருவாக்கி, கட்சியின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை விதித்திருக்கின்றனர். 

தர்மயுத்தம் எனும் பெயரில் ஒரு போராட்டத்தை பன்னீர்செல்வம் நடத்தியபோது அவரை லட்சக்கணக்கான தொண்டர்கள் நம்பினர். ஆனால் இன்று அவர் துணைமுதல்வராகி செட்டிலாகிவிட்டார். அவரை நம்பிய லட்சக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டு கிடக்கின்றனர். ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். இருவரும் இணைந்து தொண்டர்களையும், மக்களையும் ஏமாற்றி வருகிறார்கள். பெரிய நடிகர்கள்.” என்றார். 

சின்னசாமியோ “அண்ணா தொழிற் சங்கம் நலிவடைந்து கிடந்தது. அதன் செயலாளராக அம்மா என்னை ஆக்கிய பின் கடுமையாக உழைத்து அந்த அமைப்பை அகில இந்திய அளவில் வளர்த்தெடுத்தேன். ஆனால் என் வளர்ச்சி பலரது கண்களை உறுத்தியது. என்னுடன் சிரித்து சிரித்து பேசிவிட்டு, மறு நாளே கட்டங்கட்டி  கழுத்தைப்பிடித்து தள்ளிவிட்டார் பன்னீர்செல்வம். இந்த இரு துரோகிகளுடன் இனி எப்படி நான் அரசியல் செய்வது.

அதனால் கூடிய விரைவில் தினகரனை சந்திக்க இருக்கிறேன்.” என்று போட்டுத் தாக்கியுள்ளார். 
ஆக மொத்தத்தில் எந்த கொங்கு மண்டலத்தால் அ.தி.மு.க. ஆட்சியை பிடித்ததோ, அதே கொங்கு மண்டலத்தில் தலை குப்புற கவிழ துவங்கிவிட்டது அக்கட்சி. 
 

click me!