கிளைமேக்ஸ்ல ஓவர் ஆக்டிங் பண்ணிட்டீங்க! கட்சிக்கு பணம் வந்த வழியை வெளியில சொல்லணுமாம்!: கருத்துக் கேட்ட கமல்ஹாசன், கடித்துத் துப்பிய நிர்வாகிகள்.

By Vishnu PriyaFirst Published Apr 19, 2019, 7:42 PM IST
Highlights

’மாற்று அரசியல்’ என்பதுதானே கமல்ஹாசனின் தாரக மந்திரம். சொந்தக் கட்சியினரை அவர் அப்ரோச் செய்யும் விதமும் செம்ம மாற்றானதாகதான் இருக்கிறது. வழக்கமான அரசியல்தனங்கள் இல்லாமல் உண்மையிலேயே சில வித்தியாசங்களை தன் அரசியலில் காட்டத்தான் செய்கிறார். ஆனால் ரிவர்ஸ் ரிவிட்டாக அது தன்னையே தாக்குகையில்தான் மனிதர் நொந்து போகிறார். 
 

கிளைமேக்ஸ்ல ஓவர் ஆக்டிங் பண்ணிட்டீங்க! கட்சிக்கு பணம் வந்த வழியை வெளியில சொல்லணுமாம்!: கருத்துக் கேட்ட கமல்ஹாசன், கடித்துத் துப்பிய நிர்வாகிகள். 

’மாற்று அரசியல்’ என்பதுதானே கமல்ஹாசனின் தாரக மந்திரம். சொந்தக் கட்சியினரை அவர் அப்ரோச் செய்யும் விதமும் செம்ம மாற்றானதாகதான் இருக்கிறது. வழக்கமான அரசியல்தனங்கள் இல்லாமல் உண்மையிலேயே சில வித்தியாசங்களை தன் அரசியலில் காட்டத்தான் செய்கிறார். ஆனால் ரிவர்ஸ் ரிவிட்டாக அது தன்னையே தாக்குகையில்தான் மனிதர் நொந்து போகிறார். 
நேற்று தேர்தல் முடிந்த பின் சென்னையை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் மற்றும் வேட்பாளர்களை இரவில் அழைத்து தேர்தல் குறித்தும், கட்சியின் செயல்பாடுகள் குறித்தும் கருத்துக் கேட்டிருக்கிறார் கமல். ’உள்ளதை சொல்லுங்க, உண்மையை சொல்லுங்க’ என்று அவர்  ஊக்கம் கொடுத்ததால் சில நிர்வாகிகள்  போட்டு உடைத்து பேசிவிட்டனர் பல விஷயங்களை. கமலே நொந்து போனாராம்.
மக்களும், விமர்சகர்களும் சுட்டிக் காட்டியதாக அவரது வேட்பாளர்களும், சில நிர்வாகிகளும் வாரிக் கொட்டிய சில விமர்சனங்களின் ஹைலைட் பாயிண்டுகள் இதோ...
*    மாற்று அரசியல்னு சொல்லிட்டு, மேற்கத்திய பாணியில அரசியல் செய்யுறார் உங்க தலைவர். ஆனால் வெளிநாட்டுக்காரன் உயிரே போனாலும் ‘பங்சுவாலிட்டியை’ மெயின்டெய்ன் பண்ணுவான். ஆனா உங்க ஆள் கொஞ்சம் கூட கவலைப்படாம மக்களை மணிக்கணக்கா காக்க வைக்கிறார். பிரசார நேரத்தில் ‘டிராஃபிக் நெரிசலுக்கு நானென்ன பண்ண?’ன்னு நியாயம் பேசலாம். ஆனால் பொதுக்கூட்டத்துகும், பிரசாரம் துவங்குறதுக்கு முந்தைய நிகழ்வுகளுக்குமே இப்படித்தானே பண்றார். கூலி வாங்கிட்டு வர்ற கூட்டம் காத்துக் கிடக்கலாம், ஆனால் மாற்று அரசியல் தேடி தானா வந்து நிக்குற நாங்க ஏன் அவருக்கு காத்திருக்கணும்? எங்களுக்கு வேற பொழப்பே இல்லையா. நேரத்தை மதிக்காத இவரு எப்படி நல்ல தலைவனா இருக்க முடியும்?

*    ஒவ்வொரு படத்துக்கும் ஒவ்வொரு கெட்- அப் மாத்துறதுதான் கமலோட ஹிட்டே. ஆனா அரசியல்லேயும் இதையே பண்றார். அப்ப என்ன இங்கேயும் நடிக்குறேன்!னு ஒத்துக்கிறாரா?

*     தேர்தலுக்காக எடுத்த விளம்பரத்தில் மற்ற கட்சி தலைவர்கள் உரையாற்றும் டி.வி.யை அவர் ரிமோட்டை வீசி உடைச்சது, உச்சகட்ட ஆணவம், அகங்காரம், சகிப்புத்தன்மையற்ற நிலை. இவர் கையில் அதிகாரத்தைக் கொடுத்தால், தன் தவறை சுட்டிக் காட்டியவர்களையும் இப்படித்தான் உடைத்து, ஒழித்துக் கட்டுவார்.

*    வேட்பாளர்களிடம் காந்தி சிலை முன்னே ராஜினாமா கடிதம் வாங்கியது ஹைலைட் காமெடி. தன் வார்த்தைகளை மக்கள் நம்பும் வகையில் நல்லபடியாய் நடந்து பெயரைப் பெற வேண்டுமே தவிர, அதற்காக இப்படியெல்லாம் நடத்திக் காட்டக் கூடாது. இது செட்- அப்பாகவே  தெரியுது. கிளைமேக்ஸ்ல ஓவர் ஆக்டிங் பண்ணிட்டார். 

*    கட்சி துவக்கி ஒரே வருடம் ஆகிய நிலையில் உங்களுக்கு எங்கே இருந்து கொட்டியது இவ்வளவு பணம்? கோயமுத்தூரில் கார்ப்பரேட் மேடை, செல்லும் இடமெல்லாம் ஸ்டார் ஹோட்டலில்  தங்கும் கமல், டி.வி மற்றும் நாளிதழ்களில் கோடிக்கணக்கான செலவில் விளம்பரம். ஏது  இவ்வளவு பணம்? ’மாற்று அரசியல்’ என்றால், இந்த பணம் வந்த வருவாய் ஆதாரத்தை வெளியிட சொல்லுங்கள். 
*    எல்லா விளம்பரங்களிலும் கமலே பிரதானம். அவரோடு சினிமாவில் வேறு ஹீரோக்கள் நடிக்க மறுக்கும் காரணம், தங்களை டம்மி பண்ணிடுவார் என்பதால்தான். இதையேதான் அரசியலிலும் செய்கிறார். 
ஆக கமல் நடிக்கிறார், வழக்கம்போல் நன்றாக. 

இப்படி நீண்ட விமர்சனங்களைப் கவனித்துவிட்டு ரத்தம் கொதித்துவிட்டதாம் கமலுக்கு. ‘ஸ்டாப் திஸ் நான்சென்ஸ்’ என்று ஒரு கட்டத்தில் கொதித்துவிட்டாராம்.

click me!