ஊரடங்கு கடைசி வாரம் நாளை... நம்பிக்கையோடு இருங்கள், காலம் மாறும்... ப.சிதம்பரம் ட்வீட்..!

Published : May 10, 2020, 06:01 PM IST
ஊரடங்கு கடைசி வாரம் நாளை... நம்பிக்கையோடு இருங்கள், காலம் மாறும்...  ப.சிதம்பரம் ட்வீட்..!

சுருக்கம்

மே 17 வரை நீடிக்கப்பட்ட ஊரடங்கின் கடைசி வாரம் நாளை (திங்கள்கிழமை) தொடங்குகிறது. தொற்று பரவுகிறது, 3 சதவிகிதம் மரணமடைகிறார்கள், பொருளாதாரம் 100 சதவிகிதம் குலைந்து விட்டது, ஏழை நடுத்தர மக்களின் வாழ்வாதாரங்களும் சிறு, குறு தொழில்களும் சிதைந்து விட்டன.

நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு கடைசி வாரம் தொடங்க உள்ள நிலையில் பொதுமக்களுக்கு என்ன ஆறுதல் சொல்ல முடியும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்த மூன்றாம் கட்டமாக ஊரடங்கு மே 17ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மார்ச் 24லிருந்து ஏப்ரல் 14ம் தேதி வரை முதலில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு பின்னர் மே 3ம் தேதி வரையும் அதன்பின்னர் மே 17ம் தேதி வரையும் நீட்டிக்கப்பட்டுள்ளது.இந்த ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மக்கள் வருவாயின்றி, உணவின்றி தவித்து வருகின்றனர். இந்நிலையில், மே 17 வரை நீடிக்கப்பட்ட ஊரடங்கின் கடைசி வாரம் நாளை தொடங்குகிறது என ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

இது தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் டுவிட்டர் பதிவில்;- மே 17 வரை நீடிக்கப்பட்ட ஊரடங்கின் கடைசி வாரம் நாளை (திங்கள்கிழமை) தொடங்குகிறது. தொற்று பரவுகிறது, 3 சதவிகிதம் மரணமடைகிறார்கள், பொருளாதாரம் 100 சதவிகிதம் குலைந்து விட்டது, ஏழை நடுத்தர மக்களின் வாழ்வாதாரங்களும் சிறு, குறு தொழில்களும் சிதைந்து விட்டன.

 

இச்சூழ்நிலையில் உங்களுக்கு நான் என்ன ஆறுதல் சொல்ல முடியும்? நம்பிக்கையோடு இருங்கள், காலம் மாறும், காங்கிரஸ் கட்சி சொன்ன யோசனைகளை நாடும் அரசும் ஏற்றுக்கொள்ளும் விடியல் ஏற்படும். தாங்களும் தங்கள் குடும்பத்தினரும் கவனமாக, பாதுகாப்பாக இருக்க வேண்டுகிறேன் என்று பதிவிட்டுள்ளார். 

PREV
click me!

Recommended Stories

சென்னை மக்களே எச்சரிக்கையா இருங்க.. இன்று மாநகரமே குலுங்கப்போகுதாம்.. ராமதாஸ் எச்சரிக்கை
வ.உ.சிக்கு திமுக என்ன செய்தது.. எத்தனை இடத்தில் பெயர் வைத்தது? திருச்சி சிவாவுக்கு வ.உ.சி பேத்தி அதிரடி கேள்வி