முதல் நாளில் ஃபஸ்ட் கிளாஸ் மார்க் எடுத்த “லாஸ்ட் பெஞ்ச் ஸ்டூடண்ட்”...  அப்படி என்னதான் பண்ணாரு?

First Published Jan 8, 2018, 4:15 PM IST
Highlights
last bench student ttv dinakaran pass in first attempt


லாஸ்ட் பெஞ்ச் ஸ்டூடண்ட் என்றால் பாடத்தைக் கவனிக்காமல் லாஸ்ட் பெஞ்ச் மாணவிகளோடு சேர்ந்து லூட்டி அடித்துக்கொண்டு இருப்பார்கள். நன்றாக படிக்க மாட்டார்கள். நல்ல மார்க் எடுக்க மாட்டார்கள் என காலம் காலமாக இருக்கும் நடைமுறை. ஃப்ர்ஸ்ட் பெஞ்ச் ஸ்டூடண்ட் ன்னா முன்னாடி உக்காந்து இருக்கறதால‌ நாங்க‌ தான் பெஸ்ட் எல்லாத்தையும் கவனிப்போம் அதிகமாக குறிப்பெடுத்து கேள்விகளை கேட்ப்போம் என மார்தட்டிக் கொள்வார்கள். ஆனால், அதுவல்ல விஷயம் முதல் பெஞ்ச் ஆக இருந்தாலும், லாஸ்ட் பெஞ்ச் ஆக இருந்தாலும் நம் நோக்கம் என்ன? பஸ்ட் பென்ச் ஸ்டூடண்ட்ட விட நான் பெஸ்ட் என நிருபித்த ஒரு சம்பவம் இன்று தமிழக சட்ட சபையில் அரங்கேறியுள்ளது. ஒட்டுமொத்த லாஸ்ட் பெஞ்ச் ஸ்டூடண்ட்க்கும் முன்னுதாரணமாக மாறியுள்ளார் சுயேச்சை வேட்பாளர் தினகரன்.

எம்.எல்.ஏ.வாக வெற்றிபெற்ற பின் முதல்முறையாக இன்று தினகரன் சட்டமன்றத்திற்கு வருகை தந்தார். அவருடன் சட்டப்பேரவை வளாகத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களும் வருகை தந்தனர். இதைத் தொடர்ந்து நான்காம் எண் நுழைவு வாயில் வழியாக உள்ளே நுழைந்த தினகரனுக்கு, முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏ.க்கள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர். சட்டப்பேரவைக்கு சென்ற தினகரனுக்கு, ஆதரவாக  எம்.எல்.ஏ.க்கள் ரத்தினசபாபதி, கலைச்செல்வன் ஆகியோர் வாழ்த்துக் கூறி இருக்கையில் அமரவைத்தனர்.

தினகரனுக்கு எதிர்க்கட்சி வரிசையில் 148ஆம் எண் கொண்ட இருக்கை ஒதுக்கீடு செய்யப்பட்ட இந்த இருக்கை, கடந்த 2006ஆம் ஆண்டு விருத்தாச்சலம் தொகுதியில் தேமுதிக சார்பில் வெற்றிபெற்ற ஒரே எம்.எல்.ஏ.வான விஜயகாந்த் அமர்ந்திருந்தார்.

ஆளுநர் உரை தொடங்கியதுமே எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. - காங்கிரஸ், முஸ்லிம் லீக், மனித நேய ஜனநாயக கட்சி எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர். இதனால், எதிர்க்கட்சி வரிசையில் டி.டி.வி.தினகரன் மட்டும் தனிமையில் அமர்ந்து இருந்தார்.

பின்னர் சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், "விஷன் 2023 என்ற பெயரில் நிலைக்கத்தக்க வளர்ச்சியை செய்வோம் என்று கூறியுள்ளனர். ஆனால் அரசு எந்திரமே செயல்படவில்லை என்ற நிலையில், 2023க்குள் நிலைக்கத்தக்க வளர்ச்சி எப்படி சாத்தியம் என்று கேள்வி எழுப்பினார்.

ஆளுநர் உரையில் டெல்டா பகுதி விவசாயிகளின் பாதுகாப்பு குறித்தும், மீத்தேன் திட்டத்திற்குத் தடை விதிப்பது குறித்தும் எவ்வித அறிவிப்பும் இல்லை. கூடங்குளம் அணுஉலைகள் பாதுகாப்பாக இல்லாத நிலையில், புதிய அணு உலைகள் ஏன் என்ற கேள்வியை எழுப்பிய அவர், போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம், ஓகி புயல், மீனவர்கள் காணாமல் போனது என பல்வேறு முக்கிய பிரச்னைகள் குறித்து ஆளுநர் உரையில் எவ்வித அறிவிப்பும் இல்லை" வரிசையாக லிஸ்ட் வாசித்தார்.

முன் வரிசையில் பலமான எதிர்கட்சியாக இருக்கும் கடந்து மக்கள் பிரச்னைகள் தொடர்பாகவும் ஆளுநர் உரையை நன்கு ஆராய்ந்து விமர்சிக்க தவறிவிட்டது என்றே கூறவேண்டும். ஆனால் லாஸ்ட் பென்ச் ஸ்டூடண்ட் தினகரனோ தனி ஒருவனாக ஆளுநர் உரையை முழுவதுமாக மிகக் கவனமாக கவனித்து, ஆளுநர் உரையின் குறைகளையும், அவற்றில் விடுபட்ட மக்கள் பிரச்னைகளையும் லிஸ்ட் போட்டார்.

அதுமட்டுமல்ல... ஆட்சியின் மீதான விமர்சனங்களை திமுக கூட இவ்வளவு கடுமையாக விமர்சித்ததில்லை என சொல்லலாம், அப்படி இருந்தது. கூடங்குளம் அணு உலை, ஓகி புயல் பாதிப்பு, விவசாயிகளின் கோரிக்கைகள் என விலாவாரியாக லிஸ்ட் வாசித்தார்.  ஆனால், பலமான எதிர்கட்சியான திமுக சட்டசபை கூடிய சில நிமிடங்களில்  வழக்கம்போல தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை மட்டும் பாடிவிட்டு எதிர்ப்பு கூச்சல் போட்டுவிட்டு வெளியே வந்துவிட்டது ஸ்டாலின் அண்ட்கோ. காங்கிரஸ் கோஷ்டியும் அவர்களின் வாலை பிடித்தபடி வெளியேறிவிட்டது. அதுமட்டுமல்ல அதிமுகவிக்கே ட்விஸ்ட் வைத்து வெளியேறினார் கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்களில் ஒருவரும் தமீமுன் அன்சாரி.

மைனாரிட்டி அரசுக்கு ஆளுநர் ஆதரவளிப்பது என்பது ஜனநாயகத்திற்கு விரோதமான செயல் என குற்றம்சாட்டி திமுக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். வெளியே வந்து, ஆளுநரின் உரை ஜனநாயகத்திற்கு விரோதமானது. மைனாரிட்டி அரசுக்கு ஆளுநர் ஆதரவளிக்கிறார்  என ஒரு காரணத்தை சொன்னார் செயல் தல... ஆனால் மக்களின் பிரச்னைகளுக்கு தீர்வைத் தேடும் ரீதியில், ஆளுநர் உரை குறித்து செயல் தல யிடம் செயல் படுத்த எந்த விமர்சனமும் இல்லை...

மேலும் பொத்தாம் பொதுவாக அரசியல் ரீதியான விமர்சனங்களை மட்டுமே முன்வைத்த நிலையில், முதன்முறையாக சட்டமன்றத்துக்குள் சென்ற தினகரன், முழு கூட்டத்திலும் இடம்பெற்றதோடு, மக்கள் பிரச்னைகள் தொடர்பான அறிவிப்புகள் எதுவுமே இல்லாத ஆளுநர் உரையை, குறிப்பெடுத்து அலசி ஒரு கை பார்த்துவிட்டார். சுயேட்சையான தினகரனே இவ்வளவு ஆராய்ந்து விமர்சிக்கும்போது, நீங்க தெளிவாக சொல்லியிருக்கலாமே செயல் தல....

click me!