சற்றுமுன் வந்த அதிரடி அறிவிப்பு... மதுரை மற்றும் சுற்றுப்புற மக்களுக்கு அதிர்ச்சி செய்தி..!

By Thiraviaraj RMFirst Published Apr 25, 2020, 7:16 PM IST
Highlights

உலகப்புகழ்பெற்ற கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக மதுரையில் சித்திரை மாதம் நடைபெறும் திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது. உலகப்புகழ்பெற்ற கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம், அழகர் கோவில் அருள்மிகு கள்ளழகர் கோவிலில் இந்த ஆண்டு மூன்றாம் தேதி மே மாதம் தொடங்கி நடைபெறும் சித்திரைப் பெருவிழாவில் அழகர் மதுரை வைகை ஆற்றில் இறங்கிய பின்னர் மண்டூக மகரிஷிக்கு மோட்சம் கொடுக்கும் வைபவம் நடைபெற இருந்தது. இந்நிலையில் கொரோனா நோய் பரவலை தடுக்கும் பொருட்டு தேசிய பேரிடராக அறிவிக்கப்பட்டும், இதன் தொடர்ச்சியாக ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. 

இந்தச் சூழலில் சமூக இடைவெளி பின்பற்றப்படுவது கட்டாயம் என்பதை கருத்தில் கொண்டு இந்த ஆண்டு சித்திரை திருவிழா தொடர்பாக நடைபெறவிருந்த முக்கியமானவை பாகங்களான அருள்மிகு கள்ளழகர்-மதுரை-புறப்பாடு, தல்லாகுளம் எதிர்சேவை, வைகை ஆற்றில் எழுந்தருளல், ராமராயர் மண்டகப்படி தண்ணீர் பீச்சுதல், வண்டியூர் வீரராகவப்பெருமாள் கோயில் எழுந்தருளல், தேனூர் மண்டபத்தில் நடைபெறும் மண்டூக மகரிஷிக்கு மோட்சம் அழித்தல், ராமராயர் மண்டகப்படியில் தசாவதார நிகழ்ச்சி, மைசூர் மண்டகப்படி பூப்பல்லக்கு ஆகிய நிகழ்ச்சிகளுக்கு அருள்மிகு கள்ளழகர் கோவிலில் இருந்து மதுரை சென்று திரும்புவதற்கு இயலாத சூழ்நிலை உள்ளது.

 எனவே அனைத்து பக்தர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையிலும் பல்லாண்டு காலமாக நடைபெற்ற உலகப் புகழ்பெற்ற திருவிழா இடமில்லாமல் இருக்கும் பொருட்டும் திருக்கோயில் பட்டர் அவர்களின் கருத்தின்படி எட்டாம் தேதி மே மாதம் அன்று திருவிழாவின் முக்கிய நிகழ்வான மண்டூக மகரிஷிக்கு மோட்சம் அளிக்கும் நிகழ்ச்சி மற்றும் புராணம் வாசித்தல் நிகழ்ச்சி மட்டும் திருக்கோயில் பட்டாச்சாரியார்கள் மற்றும் பரிசாரகர்கள் ஆகியோர் உரிய பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றி திருக் கோயிலின் உட்பிரகாரத்தில் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட நிகழ்ச்சிகளில் பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்ய அனுமதி இல்லை என்பதால் இணையதளத்திலும் யூடியூப் மற்றும் முகநூல் மூலமாகவும் நிகழ்ச்சிகள் அனைத்தையும் எட்டாம் தேதி மே மாதம் அன்று மாலை நான்கரை மணி முதல் 5 மணி வரை நேரடியாக ஒளிபரப்ப திருக்கோயில் நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் அனைவரும் தங்களது இல்லங்களில் இருந்து நிகழ்ச்சிகளைப் பார்த்து கள்ளழகரின் அருள்பெற திருக்கோயில் நிர்வாகம் சார்பாக வேண்டி கேட்டுக் கொள்கிறோம் என திருக்கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

click me!