கொரோனாவுக்கு எதிரான நம்ம நடவடிக்கையையும் டயட்டையும் பார்த்து வியந்த மத்திய குழு - அமைச்சர் விஜயபாஸ்கர்

By karthikeyan VFirst Published Apr 25, 2020, 7:09 PM IST
Highlights

 தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்படும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மத்திய குழு பாராட்டியதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். 
 

தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டுவருவதன் விளைவாக, பாதிப்பு எண்ணிக்கை வெகுவாக கட்டுக்குள் வந்துள்ளது. ஆரம்பத்தில் பரிசோதனைகளை 200-300 என்ற நிலையில் இருந்தன. ஆனால் தற்போது தினமும் ஒருநாளைக்கு சராசரியாக 6500க்கும் அதிகமான பரிசோதனைகள் செய்யப்பட்டுவருகின்றன. 

கொரோனா நோயாளிகளுக்கு தரமான சிகிச்சை மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடிய உணவுகள் வழங்கி, அதிகமானோரை குணப்படுத்திவரும் அதேவேளையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டோருடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து அவர்களை தனிமைப்படுத்தி, கண்காணித்து, பரிசோதிக்கும் நடவடிக்கைகளையும் தமிழ்நாடு அரசு சிறப்பாக மேற்கொண்டுவருகிறது. 

இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழ்நாட்டில் தான் 41 கொரோனா பரிசோதனை ஆய்வகங்கள் உள்ளன. அதனால் அதிகமானோருக்கு பரிசோதனை செய்யப்படுகிறது. இன்று ஒரே நாளில் அதிகபட்சமாக 7707 பேருக்கு கொரோனா டெஸ்ட் செய்யப்பட்ட நிலையில், அவர்களில் வெறும் 66 பேருக்கு மட்டுமே கொரோனா உறுதியானது. பரிசோதனை எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் பாதிப்பு எண்ணிக்கை மிக மிகக்குறைவு.

இதுவரை தமிழ்நாட்டில் மொத்தம் 1821 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 960 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகிவிட்டனர். வெறும் 835 பேர் மட்டுமே சிகிச்சை பெற்றுவருகின்றனர். இதுவே தமிழ்நாட்டிற்கு மிகப்பெரிய வெற்றி. 

இதற்கிடையே, 2 மத்திய குழுக்கள்(டெக்னிக்கல் குழு, பேரிடர் குழு) தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பு பணிகளை மேற்பார்வையிட வந்தன. அந்த குழுக்கள் ஆய்வு செய்த நிலையில் அவர்களது ரிப்போர்ட் குறித்து பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், 2 மருத்துவ குழுக்கள் தமிழ்நாட்டிற்கு வந்துள்ளன. 

டெக்னிக்கல்,குழு, தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்டுவரும் சிகிச்சைகள் மற்றும் கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்தன. கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்த டெக்னிக்கல் வெகுவாக பாராட்டினர். அதேபோலவே கொரோனா வார்டில் சிகிச்சை பெறுவோருக்கு கொடுக்கப்படும் உணவுகள் சிறப்பாகவுள்ளதாக பாராட்டினர். 

பேரிடர் குழு நேற்று இரவுதான் வந்தது. இன்றுதான் பணியை தொடங்கியுள்ளனர். எனவே அவர்கள் இன்னும் ஆய்வை முடிக்கவில்லை. அவர்கள் ஆய்வை முடித்தவுடன் அவர்களது கருத்தை தெரிவிப்பார்கள் என்று விஜயபாஸ்கர் தெரிவித்தார். 

click me!