பாஜகவிற்கு அடிபணிந்து வாழ்வதை விட செத்து போவதே மேல்!! லாலு பிரசாத் கடும் தாக்கு

First Published Jan 7, 2018, 4:16 PM IST
Highlights
lalu prasad yadav criticize bjp


பாஜகவிற்கு அடிபணிந்து வாழ்வதை விட நானாக வாழ்ந்து இறந்துவிடுவேன் என லாலு பிரசாத் யாதவ் கடுமையாக சாடியுள்ளார்.

கடந்த 2015ம் ஆண்டு நடந்த பீகார் சட்டமன்ற தேர்தலில் பாஜகவிற்கு எதிராக நிதிஷ்குமாரும் லாலு பிரசாத் யாதவும் கைகோர்த்தனர். நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் லாலி பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளமும் இணைந்து பீகாரில் ஆட்சியமைத்தது. பாஜக எதிர்ப்பை பிரதானமாக முன்னிறுத்தி நிதிஷும் லாலுவும் கூட்டு சேர்ந்து தேர்தலில் வென்றனர். நிதிஷ்குமார் முதல்வரானார்.

பின்னர் கூட்டணியில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக பதவி விலகிய நிதிஷ்குமார், பாஜகவுடன் கூட்டணி அமைத்து மீண்டும் முதல்வரானார். பாஜக எதிர்ப்பை பிரதானமாக முன்னிறுத்தி தேர்தலில் வென்று முதல்வரான நிதிஷ்குமார், பாஜகவுடனேயே கைகோர்த்தது பெரிய முரணாக அமைந்தது.

இந்நிலையில், கால்நடை தீவன ஊழல் வழக்கில் பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவிற்கு மூன்றரை சிறை தண்டனை விதித்து ராஞ்சி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பாஜகவுடன் கருத்தியல் ரீதியாக வேறுபடுபவர்கள் மீது ஏதாவது ஒருவகையில் தாக்குதல் நடத்தப்படுவதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். 

இந்நிலையில், பாஜகவை கடுமையாக விமர்சித்து லாலு பிரசாத் யாதவ் டுவீட் போட்டுள்ளார். அதில், பாஜகவிற்கு அடிபணிந்து செல்வதை விட சமூக நீதி, சமத்துவம், நல்லிணக்கத்துடன் வாழ்ந்து மறைவதை பெருமையாக நினைக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

<blockquote class="twitter-tweet" data-lang="en"><p lang="en" dir="ltr">Rather than practising BJP’s Simple Rule - “Follow us or We will Fix you”. I will die happily fixing myself for Social justice, harmony &amp; equality.</p>&mdash; Lalu Prasad Yadav (@laluprasadrjd) <a href="https://twitter.com/laluprasadrjd/status/949603254916169728?ref_src=twsrc%5Etfw">January 6, 2018</a></blockquote>
<script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

பாஜகவிற்கு அடிபணிவதை விட நானாக வாழ்ந்து இறப்பதை பெருமையாக நினைப்பதாக டுவீட் போட்டு, பாஜகவை கடுமையாக சாடியுள்ளார் லாலு.
 

click me!