அணி மாறும் முன்னரே மா.செ எம்பியை நீக்கிய சசிகலா - வெலவெலத்து போன கார்டன்

Asianet News Tamil  
Published : Feb 12, 2017, 01:28 PM ISTUpdated : Sep 19, 2018, 01:05 AM IST
அணி மாறும் முன்னரே மா.செ எம்பியை நீக்கிய சசிகலா - வெலவெலத்து போன கார்டன்

சுருக்கம்

விழுப்புரம் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளரும், அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினருமான டாக்டர் லட்சுமணன் நீக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அவர் ஓபிஎஸ் அணியில் இணைவதற்காக சென்னை புறப்பட்டுச் சென்றார்.

ஓபிஎஸ் அணியை நோக்கி எம்எல்ஏக்களும், எம்பிக்களும் ஓடிவரத் தொடங்கியுள்ளனர். ஏற்கனவே 8 எம்பிக்கள் ஓபிஎஸ்டன் இணைந்து விட்ட நிலையில் தற்போது  விழுப்புரம் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளரும்,மாநிலங்களவை உறுப்பினருமான டாக்டர் லட்சுமணன் இன்று ஓபிஎஸ் அணியில் சேரவிருந்தார்.

இது குறித்த தகவல் அறிந்ததும் அதிமுக தலைமை அவர் மீது நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பாக சசிகலா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கழக கட்டுப்பாட்டை மீறிய காரணத்தால், கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக அறிவித்துள்ளார்.அப்பதவிக்கு அமைச்சர் சி.வி.சண்முகம் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட டாக்டர் லட்சுமணன் ஓபிஎஸ்ஐ நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். 

மேலும் விழுப்புரம் அதிமுக மக்களவை எம்பி ராஜேந்திரனும் தனது ஆதரவை ஓபிஎஸ்சுக்கு தெரிவித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

பாஜகவையே பைபாஸ் செய்யும் எடப்பாடி... கையை பிசையும் அமித் ஷா அண்ட் கோ..!
மதம் உண்மையில் பிரபஞ்சத்தின் அறிவியல்..! மோகன் பகவத் அசத்தல் விளக்கம்..!