"நாளை சசிகலாவை பதவியேற்க அழைக்கவில்லையென்றால் ஆளுநர் மேல் கேஸ் போடுவேன்" - சு.சாமி கொக்கரிப்பு

Asianet News Tamil  
Published : Feb 12, 2017, 01:02 PM ISTUpdated : Sep 19, 2018, 01:05 AM IST
"நாளை சசிகலாவை பதவியேற்க அழைக்கவில்லையென்றால் ஆளுநர் மேல் கேஸ் போடுவேன்" - சு.சாமி கொக்கரிப்பு

சுருக்கம்

அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா சட்டமன்ற குழுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதையடுத்து முதலமைச்சராக பதவியேற்க ஏற்பாடுகள் நடைபெற்றன.ஆனால் ஓபிஎஸ் இதற்க எதிர்ப்பு தெரிவித்ததால் தற்போது அது முடியாமல் போனது.

அதே நேரத்தில் ஆட்சியைப் பிடிக்க சசிகலா மற்றும்  ஓபிஎஸ் அணிகள் பெரும் முயற்சி எடுத்து வருகின்றன. ஏற்கனவே சசிகலா ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து தனக்கு 135 எம்எல்ஏக்கள் ஆதரவு உள்ளது என்றும் தன்னை முதலமைச்சராக பதவியேற்க அழைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

ஆனால் ஆளுநரிடம் இருந்து இதுவரை எந்தவிதமான பதிலும் இல்லாததால், தங்களது போராட்ட பாணியை மாற்றப்போதாக சசிகலா தெரிவித்தார்.

இந்நிலையில் பாஜக எம்பி சுப்ரமணியன் சாமி, நாளைக்குள் சசிகலாவை பதவியேற்க ஆளுநர் அழைக்காவிட்டால், அரசியலமைப்புச் சட்டம் 32 ன்படி ஆளுநர் மீது வழக்கு தொடரப்போவதாக தனது டுவிட்டர்  பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ஆளுநர் இவ்விஷயத்தில் காலதாமதப் படுத்தினால் அது குதிரை பேரத்துக்கு வழி வகுக்கும் என்பதால் உடனடியாக சசிகாலாவுக்கு முதலமைச்சராக பதவி ஏற்பதற்கான வாய்ப்பை வழங்க வேண்டும் என தமது டவிட்டர் பக்கத்தில் தெரித்துள்ளார்.

ஏற்கனவே சசிகலாவுக்கு தொடர்ந்து ஆதரவு தந்து வருபவர் சு,சுவாமி என்பத குறிப்பிடத்தக்கது.

 

PREV
click me!

Recommended Stories

பாஜகவையே பைபாஸ் செய்யும் எடப்பாடி... கையை பிசையும் அமித் ஷா அண்ட் கோ..!
மதம் உண்மையில் பிரபஞ்சத்தின் அறிவியல்..! மோகன் பகவத் அசத்தல் விளக்கம்..!