பிரசாரத்தின் போது கோபத்துடன் கிளம்பிய குஷ்பு... திமுகவினரை தெறிக்கவிட்ட தரமான சம்பவம்..!

By Kanimozhi PannerselvamFirst Published Mar 22, 2021, 1:55 PM IST
Highlights

திமுகவினர் மீது உடனடியாக கைது நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்றும் கமிஷ்னர் அலுவலகத்தில் புகாரளித்தார்.

அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாஜக சார்பில் நடிகை குஷ்பு ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடுகிறார். திறமைக்கு மரியாதை கொடுக்கும் பாஜகவில் கட்சியில் சேர்ந்த குஷ்புவிற்கு சில மாதங்களிலேயே தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு கிடைத்துள்ளது. தேடி வந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி வரும் குஷ்பு ஆயிரம் விளக்கு தொகுதியில் வீடு, வீடாக சென்று வாக்கு சேகரித்து வருகிறார். 

நேற்று பிரசாரத்தின் போது திடீரென சென்னை காவல் ஆணையர்  சென்ற குஷ்பு திமுக நிர்வாகிகள் மீது அடுக்கடுக்கடுக்கான புகார்களை முன்வைத்துள்ளார்.   சென்னையில் பல்வேறு இடங்களில் திமுகவினர் வன்முறையை கட்டவிழத்து விடுவதாகவும், சென்னையில் இருக்கும் தொகுதியில் பல இடங்களில் பாஜகவினரை பிரச்சாரம் செய்ய விடாமல் வன்முறையை மேற்கொள்கிறார்கள். முக்கியமாக துறைமுகம் தொகுதியில் திமுகவினர் வேண்டுமென்றே கலவரத்தை ஏற்படுத்த முயல்கிறார்கள். இங்கு இருக்கும் சேகர்பாபு வன்முறையை கையாளுகிறார்கள் என குற்றச்சாட்டினார்.  

திமுகவினர் மீது உடனடியாக கைது நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்றும் கமிஷ்னர் அலுவலகத்தில் புகாரளித்தார். மேலும் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்ட தேசிய வாக்காளர் பேரவையினரை திமுகவினர் கோடம்பாக்கத்தில் தாக்கி உள்ளனர். இதில் போலீஸ் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும், அந்த தாக்குதல் குறித்தும் விசாரிக்க வேண்டும் என தெரிவித்தார். சிறுபான்மையினர் மற்றும் அப்பகுதியில் உள்ள ஏழை எளிய மக்களிடையே குஷ்புவிற்கு ஆதரவு பெருகிவருவதே திமுகவினர் அத்துமீறல்களுக்கு காரணம் என பாஜகவினர் குற்றச்சாட்டி வருகின்றனர்.

கமிஷ்னர் அலுவலகத்தில் திமுகவினரின் அத்துமீறல்கள் குறித்து குஷ்பு புகார் கொடுத்துள்ளதால், நாளை மறுநாள் அவர் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ள பாஷா தெரு, கான் தெரு, ராதாகிருஷ்ணன் நகர்,அமீர்ஜான் தெரு,ஷர்புதீன் தெரு,மகாப் தெரு,அப்துல்லா தெரு,கங்கை அம்மன் கோவில் தெரு,கிருஷ்ணாபுரம், சங்கராபுரம், பெரியார் பாதை,, அண்ணா நெடும் பாதை
ராஜவீதி,கல்யாணபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளதாக போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்படும் எனக்கூறப்படுகிறது. 
 

click me!