குமரி மக்களவை தொகுதிக்கு ஏப்ரல் 6-ல் இடைத்தேர்தல்... சுனில் அரோரா அறிவிப்பு..!

By vinoth kumarFirst Published Feb 26, 2021, 6:13 PM IST
Highlights

கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கு ஏப்ரல் 6ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என இந்திய தலைமை தேர்தல் அதிகாரி சுனில் அரோரா கூறியுள்ளார். 

கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கு ஏப்ரல் 6ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என இந்திய தலைமை தேர்தல் அதிகாரி சுனில் அரோரா கூறியுள்ளார். 

2019 மக்களவைத் தேர்தலில் கன்னியாகுமரியில் காங்கிரஸ் சார்பில் வெற்றி பெற்ற எச்.வசந்தகுமார் கொரோனா தொற்று காரணமாக கடந்த 2020 ஆகஸ்ட் 28-ம் தேதி காலமானார். இதனால்  கன்னியாகுமரி தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. 

இந்நிலையில் தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தேதியை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இன்று டெல்லியில் அறிவித்தார். அதன்படி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சட்டப்பேரவை தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறுகிறது. 

அதேபோல கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கு ஏப்ரல் 6-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவித்துள்ளார். தேர்தலில் பதிவாகும் வாக்குகளின் முடிவு மே 2ம் தேதி வெளியாக உள்ளது. 
 

click me!