மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து சி.கே.குமரவேல் விலகியதற்கு இதுதான் காரணமாம் !!

By Selvanayagam PFirst Published Mar 18, 2019, 7:53 PM IST
Highlights

மக்கள் நீதி மய்யம் கட்சியின் கடலூர், நாகை மண்டல பொறுப்பாளர் இன்று மிடீரென ராஜினாமா செய்ததற்கு திமுகவின் அழுத்தம்தான் காரணம் என தெரிய வந்துள்ளது.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினரும், கடலூர், நாகை மண்டல பொறுப்பாளருமான கடலூரைச் சேர்ந்த சி.கே.குமரவேல், கடலூர் மக்களவைத் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்படவிருந்த நிலையில், இன்று திடீரென  அக்கட்சியிலிருந்து விலகுவதாக கட்சித் தலைமையிடம் கடிதம் கொடுத்துள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சி.கே.குமரவேல், உட்கட்சிப் பூசல் அதிகமாக இருப்பதாக உணர்ந்து கடந்த சனிக்கிழமை கட்சித் தலைவர் கமல்ஹாசனிடம் எடுத்துக் கூறினேன். அவர் அதற்கு சரியான பதிலையும் கூறாததால், கட்சித் தலைமைக்கு ராஜினாமா கடிதம் அனுப்பி வைத்துள்ளேன்" என்றார்.

மேலும் மற்ற கட்சிகளைவிட மக்கள் நீதி மய்யம் வித்தியாசமாக இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் அதுவும் மற்ற கட்சிகடிளப் போல்தான் உள்ளது. எனவே அதிலிருந்து விலகிக் கொள்கிறேன் என குமரவேல் அறிவித்துள்ளார்.

ஆனால் அவரது விலகலுக்கு உண்மையான காரணம், சி.கே.குமரவேல், கெவின்கேர் என்ற நிறுவன குழுமத்தைச் சேர்ந்தவர். இந்த நிறுவனத்தில் திமுக எம்.பி.கனிமொழியின் பங்கு உள்ளது. கருணாநிதியின் குடும்பத்துக்கும் இவர் உறவும் கூட.
 
இதனால் சி.கே.குமரவேல் விலகலுக்குக் காரணம் கருணாநிதி குடும்பத்தினரின் நெருக்கடி தான் என கூறப்படுகிறது.

click me!