குமாரசாமியைக் கழற்றிவிடும் காங்கிரஸ்… நாளுக்கு நாள் அதிகரிக்கும் எதிர்ப்பாளர்கள் !!

Published : May 09, 2019, 11:16 PM IST
குமாரசாமியைக் கழற்றிவிடும் காங்கிரஸ்… நாளுக்கு நாள் அதிகரிக்கும் எதிர்ப்பாளர்கள் !!

சுருக்கம்

கர்நாடகா முதலமைச்சர்ல்வர் குமாரசாமிக்கு எதிராக காங்., எம்.எல்.ஏ.,க்கள் நிறைய பேர் கொடி துாக்குவதால், விரைவில் அவரை காங்கிரஸ் கட்சி  கழற்றிவிடும்  நிலை உருவாகியுள்ளது.  

கர்நாடகாவில்  காங்கிரஸ் கட்சி ஆதரவில் மதச்சார்பற்ற ஜனதா தள  தலைவர் குமாரசாமியை முதலமைச்சராகியுள்ளார். தற்போது குமாரசாமிக்கும் காங்கிரஸ் கட்சித் ., தலைவர்களுக்கும் அடிக்கடி உரசல் ஏற்படுகிறது. எனவே அவரை தேர்தலுக்குப் பிறகு கழற்றிவிட காங்கிரஸ்  முடிவு செய்துள்ளது.

கடந்த 2014 தேர்தலில் கர்நாடகாவில் மொத்தம் உள்ள 28 லோக்சபா தொகுதிகளில் 17 இடங்களில் பாஜகவும் 9ல் காங்கிரஸ் கட்சியும், 2 இடங்களில் ம.த.ஜ.,வும் வெற்றி பெற்றன. இம்முறை எப்படியும் 22 இடங்களில் வெற்றி பெற்று விடலாம் என்று பாஜக  நம்புகிறது. 

காங்கிரஸ் கட்சிக்கு தோல்வி ஏற்பட்டால் கர்நாடகாவில் ம.ஜ.த., - காங்கிரஸ்., கூட்டணியிலும் ராகுல் மாற்றத்தை கொண்டு வருவார் என்கின்றனர்.
ஏற்கனவே, காங்கிரஸ்  தலைவர் சித்தராமையாவை முதலமைச்சராக்க வேண்டும் என்ற கோரிக்கை அங்கு வலுத்து வருகிறது. இதனால் இரு கட்சிகள் இடையே கருத்து மோதல்கள் வெடிக்கின்றன.

குமாரசாமி அமைச்சரவையில் உள்ள உள்துறை அமைச்சர் பாட்டீல் மற்றும் திறன் துறை அமைச்சர் பரமேஸ்வர நாயக் ஆகியோர், மாநில நலனுக்காக சித்தராமையாவை முதமைச்சராக்க  வேண்டும் என்று வெளிப்படையாக கூறி வருகின்றனர்.

தற்போது காங்கிரஸ் – மஜத கட்சிகளிடையே மோதல் போக்கு முற்றி வருவதால் இந்த ஆட்சி நீடிக்குமா என்ற சந்தேகம் வலுத்து வருகிறது. 

PREV
click me!

Recommended Stories

அதிமுக மாஜி எம்.எல்.ஏ மகனை தட்டித்தூக்கிய விஜய்..! தளபதி போட்ட 'சைலண்ட்' ஸ்கெட்ச்!
மதத்தின் பெயரால் உணர்வுகளை தூண்டினால் அவரிடம் கவனமாக இருக்க வேண்டும்... கிறிஸ்தவ விழாவில் ஸ்டாலின் பாவ எச்சரிக்கை..!