குடியாத்தம் திமுக எம்.எல்.ஏ திடீர் மரணம்... அடுத்தடுத்து திமுக எம்.எல்.ஏ.க்கள் மறைவால் கட்சித் தலைமை அதிர்ச்சி

Published : Feb 28, 2020, 09:51 AM IST
குடியாத்தம் திமுக எம்.எல்.ஏ திடீர் மரணம்... அடுத்தடுத்து திமுக எம்.எல்.ஏ.க்கள் மறைவால் கட்சித் தலைமை அதிர்ச்சி

சுருக்கம்

 குடியாத்தம் தொகுதி அதிமுக உறுப்பினர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால், கடந்த ஆண்டு அந்தத் தொகுதி காலியானது. இடைத்தேர்தலில் காத்தவராயன் தேர்வு செய்யப்பட்டார். 9 மாதங்கள் எம்.எல்.ஏ.வாக இருந்த நிலையில் காத்தவராயன் உயிரிழந்துள்ளார். இதனால், குடியாத்தம் தொகுதி மீண்டும் காலியாகி உள்ளது.  

திருவொற்றியூர் திமுக எம்.எல்.ஏ. நேற்று மரணமடைந்த நிலையில், இன்று குடியாத்தம் திமுக எம்.எல்.ஏ. காத்தவராயன் உயிரிழந்துள்ளார்.
திருவொற்றியூர் திமுக எம்.எல்.ஏ. சாமி உடல்நிலை பாதிக்கப்பட்டு நேற்று உயிரிழந்தார். இந்நிலையில் வேலூர் மாவட்டம் குடியாத்தம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. காத்தவராயன் இன்று மரணமடைந்துள்ளார். காத்தவராயன் கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு அங்கே இதய அறுவை சிகிச்சை நடைபெற்றது.
இந்நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தகவல் வெளியானது. குடியாத்தம் தொகுதி அதிமுக உறுப்பினர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால், கடந்த ஆண்டு அந்தத் தொகுதி காலியானது. இடைத்தேர்தலில் காத்தவராயன் தேர்வு செய்யப்பட்டார். 9 மாதங்கள் எம்.எல்.ஏ.வாக இருந்த நிலையில் காத்தவராயன் உயிரிழந்துள்ளார். இதனால், குடியாத்தம் தொகுதி மீண்டும் காலியாகி உள்ளது.
சாமி மறைவால், சட்டப்பேரவையில் திமுக உறுப்பினர்களின் எண்ணிக்கை 99 ஆக குறைந்தது. தற்போது காத்தவராயன் மறைவால் திமுக உறுப்பினர்கள் எண்ணிக்கை 98ஆக குறைந்துள்ளது. நேற்று கே.கே.பி சாமி மறைந்த நிலையில், இன்று காத்தவராய மறைந்துள்ளதால், திமுக தலைமையும் கட்சித் தொண்டர்களும் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

PREV
click me!

Recommended Stories

Poes Garden: 'அம்மா' வீட்டுக்கு வர்றாரா தளபதி? ஜெயலலிதா பங்களாவில் விஜய்... பரபரக்கும் சென்னை!
TVK Government : இவருக்கு கோபம் வந்தால் தவெக ஆட்சி கவிழுமாம்! யார் தெரியுமா?