கே.எஸ்.யு நிச்சயம் என்னை முதல்வர் ஆக்குவார்... கருணாநிதி, ஸ்டாலினை நம்பாத உதயநிதி..!

By Thiraviaraj RMFirst Published Jul 19, 2019, 6:34 PM IST
Highlights

அறிஞர் அண்ணாவிடம் மூன்றெழுத்து கவிபாடி நற்பெயர் பெற்று முதல்வரானார் கருணாநிதி. அதே மூன்றெழுத்தைக் கையிலெடுத்து முதல்வராக அச்சாரம் போட தயாராகி வருகிறார் மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி. 

அறிஞர் அண்ணாவிடம் மூன்றெழுத்து கவிபாடி நற்பெயர் பெற்று முதல்வரானார் கருணாநிதி. அதே மூன்றெழுத்தைக் கையிலெடுத்து முதல்வராக அச்சாரம் போட தயாராகி வருகிறார் மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி. 

திமுக கட்சி ஆரம்பித்து முதல் மாநாடு நடைபெற்றது. அப்போது கரகர குரலில் உரையாற்ற வந்த கருணாநிதி, ‘வாழ்வு மூன்றெழுத்து, வாழ்வுக்குத் தேவையான பண்பு மூன்றெழுத்து. பண்பிலே பிறக்கும் அன்பிற்கு மூன்றெழுத்து. அன்பிலே சுரக்கும் காதலுக்கு மூன்றெழுத்து. காதல் விளைவிக்கும் வீரம் மூன்றெழுத்து, வீரன் செல்லும் களம் மூன்றெழுத்து. களத்திலே பெறும் வெற்றி மூன்றெழுத்து, வெற்றிக்கு நம்மை அழைத்திடும் அண்ணா மூன்றெழுத்து’ என்றபோது மாநாடே குலுங்கியது. 

அந்தப்பேச்சுதான் அவர் பிற்காலத்தில் முதல்வராக முடிசூட அச்சாரமிட்டது. கருணாநிதியின் மூன்றெழுத்து முழக்கம் அவரை முதல்வர் ஆக்கியதைப்போல, அதே மூன்றெழுத்து தன்னையும் வருங்காலத்தில் முதல்வராக்கும் என நம்புகிறார் உதயநிதி. திமுக இளைஞரணி செயலாளராக பொறுப்பேற்று கொண்டது முதல் கட்சியில் பல்வேறு நடவடிக்கைகளை அதிரடியாக எடுத்து வருகிறார் உதயநிதி.
 
அதன் ஒரு அங்கமாக தனது பெயரை கே.எஸ்.யு என அழைக்குமாறு கட்சியினருக்கு உத்தரவிட்டுள்ளதாக இளஞரணியினர் கூறுகின்றனர். எம்.ஜி.ஆர் போல மூன்றெழுத்து இனிசியலை வைத்துக் கொண்டால் முதல்வராகலாம் என நினைத்து எத்தனையோ பேர் தங்களது பெயரைச் சுருக்கிக் கொண்டுள்ளனர். ஓ.பன்னீர்செல்வம் ஓ.பி.எஸ் ஆனார். எடப்பாடி பழனிசாமி ஈ.பி.எஸ் ஆக மாறினார். சிம்பு கூட எஸ்.டி.ஆர் ஆக மாற்றிக்கொண்டார். அந்த வரிசையில் தனது பெயரை இனி, கே.எஸ்.யு என்றே பொதுவெளியிலும், கட் அவுட், பேனர்களிலும் பயன்படுத்த வேண்டும் எனத் தனது கட்சியினருக்கு வாய்மொழியாக உதயநிதி உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

அறிஞர் அண்ணாவோ, கருணாநிதியோ, முக,ஸ்டாலினோ இப்படி இனிசியலாகச் சுறுக்கி பெயரை மாற்றிக் கொள்ளவில்லை. அந்த வகையில் அதிமுக பாணியில் மூன்றெழுத்து இனிசியலை சுறுக்க முடிவெடுத்து இருக்கிறார் உதயநிதி. ஒரு உண்மையை சொல்லியே ஆக வேண்டும்... கே.எஸ்.யு செட்டாகவில்லை. உதயநிதியாகவே இருந்து விட்டுப்போங்க மூன்றாம் கலைஞரே..! 

click me!