தமிழக கவர்னருக்கு எதிராக பொங்கிய கே.எஸ்.அழகிரி... இதுதான் காரணமா..?

Published : Sep 14, 2021, 06:00 PM IST
தமிழக கவர்னருக்கு எதிராக பொங்கிய கே.எஸ்.அழகிரி... இதுதான் காரணமா..?

சுருக்கம்

'சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்தான் ஆண்டி' என்கிற கதையாக 'இவர் ஏன் தேவையில்லாமல் கவர்னர் நியமனத்தில் தலையிடுகிறார்’என ஆளுங்கட்சியினர் கே.எஸ்.அழகிரி மீது அதிருப்தியில் இருக்கிறார்கள்.  

தமிழக புதிய கவர்னராக வரும் சனிக்கிழமை பதவியேற்க இருக்கிறார் ஆர்.என்.ரவி. ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ்., அதிகாரியான இவர் மத்திய அரசு பணியில் இருந்தபோது ரொம்பவே கறார் அதிகாரியாக இருந்திருக்கிறார். காங்கிரஸ் ஆட்சியில், உள்துறை அமைச்சராக இருந்த ப.சிதம்பரத்துக்கும், ஆர்.என்.ரவிக்கும் சில விவகாரங்களில் மோதல் ஏற்பட்டு இருக்கிறது. அமைச்சருக்கு வளைந்து கொடுக்காமல், ரவி விறைப்பாக இருந்திருக்கிறார். 

அதனால், ப.சிதம்பரம் சொல்லித்தான், அவரது சிஷ்யரான காங்கிரஸ் கட்சி தமிழக தலைவர் கே.எஸ்.அழகிரி, புதிய கவர்னருக்கு எதிராக அறிக்கை விட்டு இருக்கிறார். அதே நேரத்தில், 'சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்தான் ஆண்டி' என்கிற கதையாக 'இவர் ஏன் தேவையில்லாமல் கவர்னர் நியமனத்தில் தலையிடுகிறார்’என ஆளுங்கட்சியினர் கே.எஸ்.அழகிரி மீது அதிருப்தியில் இருக்கிறார்கள்.

PREV
click me!

Recommended Stories

பாமக பிரச்சனைக்கு திமுக தான் காரணம்.. ராமதாஸை சுற்றி தீய சக்திகள்.. ஒரே போடாக போட்ட அன்புமணி!
ஒரு தலைவருக்கு இது கூடவா தெரியாது.. விஜய்யை கழுவி ஊற்றிய புதுச்சேரி அமைச்சர்.. என்ன விஷயம்?