இந்த தகர ஷீட்டுக்கும் ஸ்டீல் ராடுக்கும் ரூ1.54 கோடி செலவா..? கனிமொழியால் ஷாக்காகி போன காயத்ரி

By Thiraviaraj RMFirst Published Sep 14, 2021, 5:19 PM IST
Highlights

தூத்துக்குடி மாநகராட்சியில் திமுக எம்பி கனிமொழியால் திறந்து வைக்கப்பட்டுள்ள தகர ஷீட்டு, ஸ்டீல் ராடு பேருந்து நிறுத்திற்கு ரூ 1.54 கோடி செலவானதா என பாஜக நிர்வாகி காயத்ரி ரகுராம் கேள்வி எழுப்பியுள்ளார். 
 

தூத்துக்குடி மாநகராட்சியில் திமுக எம்பி கனிமொழியால் திறந்து வைக்கப்பட்டுள்ள தகர ஷீட்டு, ஸ்டீல் ராடு பேருந்து நிறுத்திற்கு ரூ 1.54 கோடி செலவானதா என பாஜக நிர்வாகி காயத்ரி ரகுராம் கேள்வி எழுப்பியுள்ளார். 

தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியின் திமுக எம்பியாக இருப்பவர் கனிமொழி. சமீபத்தில் தூத்துக்குடி மாநகராட்சி சீர்மிகு திட்டத்தின் கீழ் (2019-2020) ஆம் ஆண்டு எம்பி நிதியை கொண்டு ஒரு பேருந்து நிழற்குடையை கடந்த 5 ஆம் தேதி கனிமொழி எம்பி திறந்து வைத்தார். கடந்த 5 ஆம் தேதி திறக்கப்பட்ட அந்த நவீன பேருந்து நிழற்குடை சுமார் 1.54 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டதாகும். இதுகுறித்த கல்வெட்டு அந்த பேருந்து நிலையத்திற்கு அருகே வைக்கப்பட்டுள்ளது. இந்த கல்வெட்டையும் பேருந்து நிறுத்தத்தையும் புகைப்படம் எடுத்து போட்ட பாஜக நிர்வாகி காயத்ரி ரகுராம், எம்பி கனிமொழிக்கு ஒரு கேள்வியையும் கேட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்வீட்டை கனிமொழிக்கு டேக் செய்து பதிவிட்ட நிலையில், இந்த பேருந்து நிழற்குடைக்கு ரூ 1.54 கோடி செலவா என கேட்டுள்ளார். இது சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் நெட்டிசன்கள் கனிமொழி எம்.பி.,யிடம் சரமாரி கேள்விகளை கேட்டு வருகின்றனர்.
4 பெட்ரூம் உள்ள ஒரு பிளாட் வாங்கினாலே ஒரு கோடி தாண்டாது. இந்த தகர ஷீட்டுக்கும் ஸ்டீல் ராடுக்கும் 1.54 கோடி செலவா என நெட்டிசன்கள் சரமாரி கேள்வி கேட்டு வருகின்றனர்.

click me!