ஓபிஎஸ், இபிஎஸ்க்கு எதிராக பெங்களூரு புகழேந்தி தொடர்ந்த அவதூறு வழக்கு.. சிறப்பு நீதிமன்றம் கூறியது என்ன?

By vinoth kumarFirst Published Sep 14, 2021, 5:06 PM IST
Highlights

பெங்களூர் புகழேந்தி அக்கட்சியினர் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் ஆகியோர் மீது எம்.பி., எம்எல்ஏக்களை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இதில், ஆஜராக இருவருக்கும் சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் அந்த வழக்கை ரத்து செய்யக்கோரி இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு எதிராக பெங்களூரு புகழேந்தி தொடர்ந்த அவதூறு வழக்கை சென்னை சிறப்பு நீதிமன்றம் அக்டோபர் 16ம் தேதிக்கு ஒத்திவைத்தது. 

சமீபத்தில் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி அதிமுகவை விமர்சித்து இருந்தார். இதனால், அதிமுக செய்தித் தொடர்பாளராக இருந்த புகழேந்தி ஒவ்வொரு முறையும் கூட்டணி சேர்வது, தேர்தல் தோல்விக்கு பின் மற்றவர்களை விமர்சனம் செய்வது பாமகவின் வாடிக்கையாக உள்ளது என தெரிவித்தார். இதைத்தொடர்ந்து, கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்புகளில் இருந்து புகழேந்தி நீக்கப்பட்டார்.  

இதனையடுத்துஅதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பெங்களூர் புகழேந்தி அக்கட்சியினர் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் ஆகியோர் மீது எம்.பி., எம்எல்ஏக்களை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இதில், ஆஜராக இருவருக்கும் சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் அந்த வழக்கை ரத்து செய்யக்கோரி இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை தொடரலாம் என்றும், இருவரும் ஆஜராக விலக்கு அளித்தும், வழக்கின் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உத்தரவிட்டது. இந்நிலையில், இந்த வழக்கு இன்று சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. உயர் நீதிமன்றத்தில் விலக்கு பெற்றதால் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ஆஜராகவில்லை. இதையடுத்து, வழக்கு விசாரணையை அக்டோபர் 16ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தனர். 

click me!