ஆவேசப்பட்ட கே.எஸ்.அழகிரி... காங்கிரஸ் நிர்வாகியை வெளுத்தெடுத்த வீடியோ..!

Published : Jan 08, 2020, 05:44 PM IST
ஆவேசப்பட்ட கே.எஸ்.அழகிரி... காங்கிரஸ் நிர்வாகியை வெளுத்தெடுத்த வீடியோ..!

சுருக்கம்

காங்கிரஸ் இளைஞர் அணி நிர்வாகி நரேஷ், மாணவர்களுடன் வாக்குவாதம் செய்ததால் ஆத்திரப்பட்ட தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தாக்கிய வீடியோ வைரலாகி வருகிறது. 

சென்னை, வள்ளுவர் கோட்டத்தில், காங்கிரசார் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகி ஒருவரை அக்கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தாக்கியதால் சலசலப்பு ஏற்பட்டது. டெல்லி ஜே.என்.யூ பல்கலைக்கழக மாணவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது சில மாணவ அமைப்புகளும் அருகே ஆர்ப்பாட்டம் நடத்திக்கொண்டு இருந்ததால் காங்கிரசாருக்கு இடையூறு ஏற்பட்டது.

இதையடுத்து மாணவர்களிடம் கே.எஸ்.அழகிரி பேச்சுவார்த்தை நடத்தியபோது, காங்கிரஸ் இளைஞர் அணி நிர்வாகியான நரேஷ் என்பவர் மாணவர்களுடன் வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கே.எஸ்.அழகிரி, தனது கட்சி நிர்வாகி நரேஷை தாக்கினார்.

PREV
click me!

Recommended Stories

அறிவாலய வாசலில் சாதி தீண்டாமை பார்த்து தடுக்கிறார்கள்..! முன்னாள் எம்.எல்.ஏ ஆவேசம்
அமைச்சர்களின் சொத்து வழக்குக்கு தடையாக உள்ளார்கள்.. ஜி.ஆர் சாமிநாதன், ஆனந்த் வெங்கடேஷ்க்கு எதிராக திமுக இருக்க இதுவே காரணம்..! அண்ணாமலை அதிரடி