மோடி, அமித்ஷா விரும்பினார்கள்... மாணவர்கள் தாக்கப் பட்டார்கள்...?? பகீர் கிளப்பும் உத்தவ் தாக்ரே...!!

By Ezhilarasan BabuFirst Published Jan 8, 2020, 4:36 PM IST
Highlights

மும்பை  தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் பயங்கரவாதிகள் என்படி முகமூடி அணிந்து இருந்தார்களோ  அதேபோலதான் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய கும்பலும்  முகமூடி அணிந்து வந்தார்கள்

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர்கள் விவகாரத்தில் பிரதமர் மோடியும் அமித் ஷாவும் என்ன விரும்பினார்களோ அதுதான்  நடந்து கொண்டிருக்கிறது என சிவசேனா அதிரடியாக குற்றம்சாட்டியுள்ளது .  இந்திய குடியுரிமை சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது .   குறிப்பாக மாணவர்கள் இப் போராட்டத்தை தீவிரப்படுத்தி முன்னெடுத்துச் செல்கின்றனர் .  டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் இப்போராட்டத்தில்   அதிகம் தீவிரம் காட்டி வந்த நிலையில்  மாணவர்கள் மீது முகமூடி அணிந்த கொலைவெறி கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது.

 

இதற்கு பல்வேறு அரசியல்  கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் ,  மாணவர்கள்  தாக்கப்பட்டதற்கு சிவசேனா கண்டனம் தெரிவித்துள்ளது அது குறித்து கருத்து தெரிவித்துள்ள மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ்  தாக்கரே , மாணவர்கள் மீதான தாக்குதல் கடந்த 2008ஆம் ஆண்டு பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலையே நினைவுபடுத்துகிறது என்றார்,   இந்நிலையில் பிரதமர் மோடியையும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும்  சிவசேனா கடுமையாக விமர்சித்துள்ளது .  அக்கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான  சாம்னா  தலையங்கத்தில்  வெளியிட்டுள்ளது அதில், 

பிரதமர் நரேந்திர மோடியும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் என்ன விரும்பினார்களோ அதுதான் டெல்லி பல்கலைக்கழக மாணவர்கள் விவகாரத்தில்  நடந்து கொண்டிருக்கிறது,  கடந்த 2008 ஆம் ஆண்டு மும்பை  தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் பயங்கரவாதிகள் என்படி முகமூடி அணிந்து இருந்தார்களோ  அதேபோலதான் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய கும்பலும்  முகமூடி அணிந்து வந்தார்கள் என்றார்,  தொடர்ந்து பேசிய அவர் ,   நாடு மிகுந்த ஆபத்தில் உள்ளது ,  பிரிவினைவாத அரசியல் நாட்டிற்கு மிகவும் ஆபத்து என்றார் அவர் . 
 

click me!