தொகுதி குறைவு என்பதை விட திமுக நம்மை நடத்தும் விதம் கேவலமாக இருக்கிறது.. கண்ணீர் ததும்ப கே.எஸ்.அழகிரி பேச்சு.!

By vinoth kumarFirst Published Mar 5, 2021, 4:03 PM IST
Highlights

இப்படியே போனால் எதிர்காலத்தில் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியே இல்லாமல் போய்விடுமோ என்கிற பயம் இருக்கிறது என்று கே.எஸ்.அழகிரி கண்ணீருடன் பேசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இப்படியே போனால் எதிர்காலத்தில் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியே இல்லாமல் போய்விடுமோ என்கிற பயம் இருக்கிறது என்று கே.எஸ்.அழகிரி கண்ணீருடன் பேசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

திமுக கூட்டணியில் முக்கியக் கட்சியாக இருக்கும் காங்கிரசுக்கும், அக்கட்சி எதிர்பார்க்கும் எண்ணிக்கையில் சீட் ஒதுக்க திமுக மறுத்துவிட்டது. அதேசமயம், பேச்சுவார்த்தை சுமுகமாக இருக்கிறது என சொல்லி வந்த காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, பந்து திமுகவிடம் இருக்கிறது. இனி அவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும் அதிருப்தியில் பேசினார். 

இதற்கிடையே, காங்கிரசுக்கு கொடுக்கப்படுவதாக திமுக சொல்லும் சீட் எண்ணிக்கை மற்றும் தொகுதிகள் குறித்து விவாதிப்பதற்காக கட்சியின் மூத்த தலைவர்கள், மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் வீரப்ப மொய்லி கலந்துகொண்டார்.

அப்போது பேசிய மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி;- திமுக அளிப்பதாக கூறும் தொகுதி எண்ணிக்கை, மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசமாக இருக்கிறது.இங்குள்ள எழுச்சியைப் பார்த்தால் எம்எல்ஏ சீட்டு கிடைக்கும் என்று எதிர்பார்த்தவர்கள் அமைதியாக உட்கார்ந்திருக்கின்றனர். மற்றவர்கள் எல்லாம் வேண்டாம் என்று சொல்கிறீர்கள். 

இதற்கு முன்பு காங்கிரஸ் கட்சிக்கு 60 சீட் கிடைத்தது, பின்னர் 40 சீட் கிடைத்தது, இப்போது அதையும் குறைக்கும் விதமாகப் பேசுகிறார்கள். இப்படியே போனால் எதிர்காலத்தில் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியே இல்லாமல் போய்விடுமோ என்கிற பயம் இருக்கிறது என்று கண்ணீர் ததும்ப கே.எஸ்.அழகிரி பேசினார். மேலும், தன்மானம், சுய கௌரவம் முக்கியம், திமுகவுடன் கூட்டணி உடைந்துவிட்டது என கூறவில்லை. தொகுதிகளின் எண்ணிக்கை குறைவு என்பதை விட நம்மை நடத்தும் விதம் மகவும் கவலை அளிக்கிறது. திமுகவுடன் இன்று பேச்சுவார்த்தை இல்லை. விரைவில் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடைபெறும் என  கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். 
 

click me!