திமுகவுடன் கணவன் மனைவியைப்போல இருந்தோம்.. கடுந்துயரத்தில் அழகிரி..

By Ezhilarasan BabuFirst Published Mar 5, 2021, 3:52 PM IST
Highlights

தன்மானத்தை விட்டுக் கொடுக்காமல் திமுகவுடன் கூட்டணி  இறுதி செய்யப்பட்டும் என்றும்,  கணவன் மனைவியை விட கடந்த 15 ஆண்டுகளாக திமுக - காங்கிரஸ் கூட்டணியில் ஒற்றுமையாக இருந்தோம்.

தன்மானத்தை விட்டுக் கொடுக்காமல் திமுகவுடன் கூட்டணி  இறுதி செய்யப்பட்டும் என காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் கே. எஸ் அழகிரி பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது. 

தமிழக சட்டமன்றத்திற்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி தொகுதி பங்கீடு, வேட்பாளர் நேர்காணல் என அடுத்தடுத்த பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில் திமுக  தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி  பங்கீட்டு பேச்சுவார்த்தையை வேகப்படுத்தி உள்ளது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 6 தொகுதிகள்  ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. காங்கிரஸ், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளுடன் திமுகவின் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இழுபறியில் இருந்து வருகிறது. 

திமுக காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடிப்பதால் சென்னையில் உள்ள தலைமை அலுவலத்தில் கே. எஸ் அழகிரி தலைமையில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.  அப்போது மாவட்ட தலைவர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளிடம் கருத்து கேட்கப்பட்டது.  அதில் பலரும் திமுகவுடன் முடிந்த அளவிற்கு கூட்டணியை முடிவு செய்ய வேண்டும் என கருத்து தெரவித்ததாக கூறப்படுகிறது. கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரணி, கடந்த முறை பெற்றது போலவே அதிக தொகுதிகளை பெறவேண்டும் என காங்கிரஸ் முயற்சி செய்கிறது, 

என்னைப் பொறுத்த வரையில் அதிக தொகுதிகளை பெறுவதைவிட வெற்றிபெறும் தொகுதிகளை பெறவேண்டும் என தான் வலியுறுத்தியதாக கூறினார்.  கூட்டத்தின் போது உரையாற்றிய காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே. எஸ் அழகிரி தன்மானத்தை விட்டுக் கொடுக்காமல் திமுகவுடன் கூட்டணி  இறுதி செய்யப்பட்டும் என்றும்,  கணவன் மனைவியை விட கடந்த 15 ஆண்டுகளாக திமுக - காங்கிரஸ் கூட்டணியில் ஒற்றுமையாக இருந்தோம். ஆனால் ஏனோ திமுக குறைவான தொகுதிகளை ஒதுக்குவோம் என கூறுவது வருத்தமளிக்கிறது.என  கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது. 
 

click me!