அட , இதுவல்லவோ, அரசியல் நாகரிகம்... அமைச்சரை கலாய்த்த சசிகலா அண்ணன் மகள் கிருஷ்ணப்ரியா...

 
Published : Dec 26, 2017, 06:32 PM ISTUpdated : Sep 19, 2018, 01:44 AM IST
அட , இதுவல்லவோ, அரசியல் நாகரிகம்... அமைச்சரை கலாய்த்த சசிகலா அண்ணன் மகள் கிருஷ்ணப்ரியா...

சுருக்கம்

krishnapriya troll minister Jayakumar

"காலம் கடந்து தினகரன் ஆதரவாளர்களை நீக்குவதால், எடப்பாடி - ஓபிஎஸ் கையாலாகாதவர்கள் (Impotent)" என்று ஆர்எஸ்எஸ் பிரமுகரும், துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி கூறியிருந்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அதிமுக IT Wing தலைவர், ஆடிட்டர் குருமூர்த்தியை முட்டாள் (Idiot) என்று சொல்லி "அதிமுகவின் இந்த நிலைக்கு ஆடிட்டர் குருமூர்த்தி தான் காரணம்" என்றும், அதிமுக உள்விவகாரங்களில் தலையீட்டால் அதிமுக அமைச்சர்களுடன் ஆடிட்டர் குருமூர்த்தி பேசிய வீடியோக்களை வெளியிடுவோம்" என்றும் மிரட்டியுள்ளார்.

இப்படி குருமுர்தியின் டிவிட்டுக்கு சமூகவளைதளங்களில் கண்டனங்கள் எழுந்தநிலையில், இன்று தலைமை செயலகத்தில் பேசிய மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், ஆடிட்டர் குருமூர்த்தி எந்த முகத்தை வைத்துக்கொண்டு இப்படியெல்லாம் பேசுகிறார் என தெரியவில்லை. நாவடக்கத்துடன் பேச வேண்டும் என்றார்.

அதிமுகவின் தொண்டர்கள் முதல் முதல்வர் வரை அனைவருமே ஆண்மையோடுதான் இருக்கிறோம். ஆண்மையில்லாதவர்கள்தான் மற்றவர்களைப் பார்த்து அது இருக்கிறதா என்று கேட்பார்கள். ஆடிட்டர் குரு மூர்த்திக்கு அது இருக்கிறதா என்று முதலில் செக் செய்ய வேண்டும். என அமைச்சர் ஜெயக்குமார் பேட்டியில் கூறியிருந்தார்.

இப்படி அரசியல் நாகரிகம் இல்லாமல் ஒரு பத்திரிக்கை ஆசிரியரும், அரசியல் ஆலோசகருமான ஆடிட்டர் குருமூர்த்தி ஒரு மாநிலத்தின் முதல்வர் மற்றும் துணை முதல்வரை இப்படி பேசியிருப்பது அரசியல் தலைவர்களை முகம் சுழிக்க வைத்துள்ளது.

இந்நிலையில், சசிகலாவின் அண்ணன் மகளும் இளவரசியின் மகளுமான கிருஷ்ணப்ரியா தனது முகநூல் பக்கத்தில் கூறியுள்ளதாவது; தவறான வார்த்தைகளை பிரயோகித்திருக்கிறார் என சொல்லிவிட்டு, தாமும் அதே தரம்தாழ்ந்த வார்த்தைகளை பிரயோகிப்பதா???!! அட , இதுவல்லவோ, அரசியல் நாகரிகம்...😖 என பதிவிட்டுள்ளார்.

 

PREV
click me!

Recommended Stories

மோடிக்காக காரை ஓட்டிய முஹமது நபியின் 42 வது நேரடி தலைமுறை ஜோர்டான் இளவரசர்..!
EVM எந்திரம் பிராடு இல்லை..! நான் 4 முறை வெற்றிபெற்றுள்ளேன்.. காங்கிரஸ் எம்.பி., சுப்பிரியா சுலே ஆதரவு