தேமுதிக அழிவுப் பாதைக்கு போகுது... பிரேமலதாவை விளாசிய சசிகலா உறவினர்!

Published : Mar 09, 2019, 07:00 AM IST
தேமுதிக அழிவுப் பாதைக்கு போகுது... பிரேமலதாவை விளாசிய சசிகலா உறவினர்!

சுருக்கம்

 தே.மு.தி.க விஜயகாந்த் அவர்களால், அடைந்த உயரத்தின் அடையாளங்கள் எல்லாம் அழிக்கப்பட்டு, அதல பாதாளம் செல்லகூடிய அறிகுறிகளெல்லாம் அருமையாக தென்படுகிறது. 

விஜயகாந்தால் வளர்ந்த தேமுதிகவை அழிவு நிலைக்கு கொண்டு செல்வதற்கு பிரேமலதாவும் சுதீஷுமே காரணம் என இளவரசியின் மகள் கிருஷ்ணப்ரியா தெரிவித்துள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவுடன்  சேர்ந்து சிறைக்கு சென்ற இளவரசியின் மகள் கிருஷ்ணப்ரியா. அரசியல் நிலவரங்கள் குறித்து அவ்வப்போது ட்விட்டரில் தனது கருத்துகள் சொல்வதை வாடிக்கையாக வைத்திருக்கிறார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு  தேமுதிக நடத்திய பேர அரசியல் தமிழகத்தில் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது. இதைப் பற்றி இளவரசி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அவர் தெரிவித்திருக்கிறார். 
ட்விட்டரில் அவர், “2006 முதல் தே.மு.தி.க விஜயகாந்த் அவர்களால், அடைந்த உயரத்தின் அடையாளங்கள் எல்லாம் அழிக்கப்பட்டு, அதல பாதாளம் செல்லகூடிய அறிகுறிகளெல்லாம் அருமையாக தென்படுகிறது. அவ்வாறான ஒரு நிலைக்கு அக்கட்சியை தள்ளியதில் சம பங்கு வகிக்கிறார்கள் பிரேமலதாவும் சுதீஷும்” என இளவரசி குறிப்பிட்டுள்ளார். 

PREV
click me!

Recommended Stories

இந்த மூன்று நாடுகளின் ஜனாதிபதிகளைக் கொல்ல துடிக்கும் அமெரிக்கா..? டிரம்பின் சதித் திட்டம்..!
அப்போ எல்லாமே வதந்தி தானா.. போட்டி போட்டு மறுத்த டிடிவி தினகரன், தமிழிசை.. என்ன விஷயம்?