கிருஷ்ணகிரி ரஜினி மன்ற மா.செ நீக்கம்... அவரே வேண்டாம்னு போயிட்டாரு நீக்கி என்ன பிரயோஜனம்? இந்த விஷயத்துலயும் நீங்க ரொம்ப லேட்டு தலைவரே...

By sathish kFirst Published Feb 9, 2019, 10:48 AM IST
Highlights

கிருஷ்ணகிரி மாவட்ட ரஜினி மக்கள் மன்ற செயலாளர் மதியழகன் திமுகவில் இணையவுள்ளதாக செய்திகள் வெளியானதால், அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கப்பட்டுள்ளர். இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகி உள்ளது. 

அரசியல் விஷயத்துல உருப்படியா எந்த முடிவையும் எடுக்க மாட்டேங்கிறார். மன்றத்தின் மாநில நிர்வாகிகளாக வந்து உட்காரும் கண்ட நபர்களும் படுத்தும் பாடும், ஆடும் ஆட்டமும் தாங்க முடியலை. ஒரு மாயைக்காக உழைச்சு கொட்டுறதை விட, யதார்த்தமான தி.மு.க.வில் இணைஞ்சு அதன் வெற்றிக்கு பாடுபடப்போறோம்!” என சொன்ன கிருஷ்ணகிரி மாவட்ட ரஜினி மக்கள் மன்ற செயலாளரான மதியழகன்   வரும் 24ம் தேதியன்று கிருஷ்ணகிரியில் ஸ்டாலின் முன்னிலையில் சுமார் இருபத்தைந்தாயிரம் பேரை பெரும் விழா எடுத்து இணைக்கிறாராம். எல்லாமே பக்காவாக திட்டமிடப்பட்டு, தெளிவாக நடத்தப்படுகின்றன என்கிறார்கள்.  

ரஜினி மக்கள் மன்ற செயலாளரான மதியழகன் இன்று மாலை ஸ்டாலினை சந்தித்து தி.மு.க.வில் இணைகிறார் என்று தகவல்கள் காதுக்குப் போகவே மனுஷன் ரொம்பவே உடைத்துப் போயிட்டாராம் காரணம் அது அவரின் சொந்த ஊர்.

அதுமட்டுமல்லாமல் முதல் முறையாக தனது மன்றம் உடைந்து, சொந்த மண்ணிலேயே செல்வாக்கு சரிவது மட்டுமல்ல, தமிழகத்தில் உடையும் முதல் மன்றம் இது. இதை முன்னுதாரணமாக எடுத்துக் கொண்டு வரிசையாக பிளவுகள் இனி நடக்க துவங்கிவிடுமே! எனும்  பெரும் கடுப்பான ரஜினி அவரசரை அவசரமாக தனது VM சுதாகரை அரழித்து அறிக்கை விடச் சொன்னாராம்.

அந்த அறிக்கையில், கிருஷ்ணகிரி மாவட்ட ரஜினி மக்கள் மன்ற  செயலாளராக இருந்து வந்த மதியழகன், அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து உடனடியாக நீக்கப்பட்டு, ரஜினி மக்கள் மன்ற இணை  செயலாளராக இருந்த சீனிவாசன் அவர்கள்  மாவட்ட ரஜினி மக்கள் மன்ற  செயலாளராக அன்புத் தலைவரின் ஒப்புதலுடன் நியமிக்கப்படுகிறார்.  

அவரே நீங்களும் உங்க கட்சியும் வேண்டாம்னு தான் நடையை கட்டிட்டாரு , இப்போ நீக்கி என்ன புரியோஜனம் தலைவரே? இப்போவாச்சும் எங்களோட மனசுல இருக்குறத புரிஞ்சிக்கோங்க, மதி அண்ணே சொல்லிட்டாரு, எங்களால சொல்ல முடியல, வெளியில கிளம்ப முடியல அதான் வித்தியாசம் நீங்களா பாத்து சீக்கிரம்  கட்சி விஷயத்துல கவனம் செலுத்துங்க தலைவரே... கால் நூற்றாண்டு காலமா, அதோ இதோன்னு தண்ணி காட்டிட்டிங்க, திடீர்ன்னு கட்சி ஆரம்பிக்கிறேன்னு சொன்னீங்க... சொல்லியும் இதோ ஒரு வருஷம் ஆகுது. ஆனா ஒன்னும் காணோம் நாங்களும் எவ்வளவு நாள் தான் காத்திருக்கிறது என வெளிப்படையாகவே  சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர் ரஜினி ரசிகர்கள்.

click me!