இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த ஜெகனை பெண்ணின் தந்தை சங்கர் மற்றும் உறவினர்கள் 2 பேர் அரிவாளால் சரமாரியாக வெட்டி ஆணவக்கொலை செய்தனர். இது தொடர்பான வீடியோ வைரலாகி தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கிருஷ்ணகிரியில் பட்டப்பகலில், நடுரோட்டில் இளைஞர் கழுத்தறுத்து ஆணவக்கொலை செய்யப்பட்டிருப்பது நெஞ்சைப் பதற வைக்கிறது என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் கிட்டம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஜெகன் (28). இவர் சரண்யா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளனர். இருவரும் ஒரே சமுகத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் இவர்களது காதலுக்கு பெண் வீட்டார் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இவர்களது எதிர்ப்பையும் மீறி ஜெகன், சரண்யா இருவரும் கடந்த மாதம் திருமணம் செய்து கொண்டதால் பெண் வீட்டார் ஆத்திரத்தில் இருந்துள்ளனர்.
இதையும் படிங்க;- யார் வீட்டுப் பொண்ண யாரு கல்யாணம் பண்றது! நடுரோட்டில் மருமகன் ஆணவக்கொலை? பெண் கதறல்! நடந்தது என்ன? பகீர் தகவல்
இந்நிலையில், இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த ஜெகனை பெண்ணின் தந்தை சங்கர் மற்றும் உறவினர்கள் 2 பேர் அரிவாளால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர். இது தொடர்பான வீடியோ வைரலாகி தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இந்த விடியா ஆட்சியில் தமிழ்நாடே கொலைக்களமாக மாறிப் போயிருப்பது வேதனை அளிக்கிறது என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க;- பாஜகவில் இருந்து கூண்டோடு அதிமுகவிற்கு பல்டி அடித்த மகளிர் அணியினர்..!அதிர்ச்சியில் அண்ணாமலை
இதுதொடர்பாக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- கிருஷ்ணகிரியில் பட்டப்பகலில், நடுரோட்டில் இளைஞர் கழுத்தறுத்து ஆணவக்கொலை செய்யப்பட்டிருப்பது நெஞ்சைப் பதற வைக்கிறது.
கிருஷ்ணகிரியில் பட்டப்பகலில், நடுரோட்டில் இளைஞர் கழுத்தறுத்து ஆணவக்கொலை செய்யப்பட்டிருப்பது நெஞ்சைப் பதற வைக்கிறது.
அரசியல் கொலை,ஆதாயக்கொலை,
ஆணவக்கொலை என குற்றவாளிகள் அச்சமின்றி வாடிக்கையாக செயல்படும் இந்த விடியா ஆட்சியில் தமிழ்நாடே கொலைக்களமாக மாறிப் போயிருப்பது வேதனைக்குரியது. pic.twitter.com/3hFRTPjFQY
அரசியல் கொலை, ஆதாயக்கொலை, ஆணவக்கொலை என குற்றவாளிகள் அச்சமின்றி வாடிக்கையாக செயல்படும் இந்த விடியா ஆட்சியில் தமிழ்நாடே கொலைக்களமாக மாறிப் போயிருப்பது வேதனைக்குரியது என இந்த கொலை தொடர்பான வீடியோவை பகிர்ந்துள்ளார்.