உச்சகட்ட அதிர்ச்சி... கிருஷ்ணகிரியிலும் கணக்கை தொடங்கியது கொரோனா..!! பறிபோனது பச்சை மண்டல பெருமை..!!

By Ezhilarasan BabuFirst Published May 2, 2020, 10:23 AM IST
Highlights

மிகவும் பாதுகாப்பாக இருந்த கிருஷ்ணகிரியிலும்  கொரோனா அரக்கன் நுழைந்து விட்டானே என அம்மாவட்ட மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர், அதாவது  கிருஷ்ணகிரி  வேப்பனஹள்ளி அருகே உள்ள  நல்லூர் கிராமத்தை சேர்ந்த  68 வயது நபருக்குதான் தற்போது கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது,  

இதுவரை கொரோனா தொற்றுக்கு ஆளாகாமல் பச்சை மண்டலம் என பெயரெடுத்து வந்த கிருஷ்ணகிரியில்  இன்று புதிதாக  ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது,  இது அம்மாவட்ட மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .  இதனால் பச்சை மண்டலம் என்ற பெருமையை கிருஷ்ண மாவட்டம் இழந்துள்ளது.  தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது , இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 203 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது ,  இதனையடுத்து  தமிழகத்தில் கொரோனாவால்  பாதித்தவர்களின் எண்ணிக்கை 2526 ஆக உயர்ந்துள்ளது .  இதில்  ஆயிரத்து 82 பேர் சென்னையை சேர்ந்தவர்கள் ஆவர்.  இந்நிலையில்  சென்னையை தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா வைரஸ் ஒரளவுக்கு கட்டுக்குள் வந்துள்ளது ,  இதில் ஈரோடு நீலகிரி கரூர் தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்கள் நோய் தொற்றிலிருந்து மீண்டுள்ளன ,  நேற்று கரூரில் ஒருவருக்கு தோற்று உறுதியானதால் கொரோனா  இல்லாத மாவட்டம் என்ற பெருமையை அது இழந்துள்ளது.  

அதேபோல் தேனி மாவட்டம் கொரோனாவிலிருந்து முழுமையாக மீண்டுள்ளது,   இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரை ஒருவருக்குக்கூட கொரோனா உறுதியாகவில்லை என்ற நிலை  நீடித்து வந்த நிலையில் , தற்போது கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் இன்று கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது இது கிருஷ்ணகிரி மாவட்டத்தை மட்டுமல்லாது  தமிழகத்தையே அதிரிச்சியடைய வைத்துள்ளது  இதுவரை கொரோனா தொற்றுக்கு ஆளாகாமல் பச்சை மண்டலம் என பெயரெடுத்து வந்த கிருஷ்ணகிரியில் முதல் முறையாக ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  மிகவும் பாதுகாப்பாக இருந்த கிருஷ்ணகிரியிலும்  கொரோனா அரக்கன் நுழைந்து விட்டானே என அம்மாவட்ட மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர், அதாவது  கிருஷ்ணகிரி  வேப்பனஹள்ளி அருகே உள்ள  நல்லூர் கிராமத்தை சேர்ந்த  68 வயது நபருக்குதான் தற்போது கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது,  

அந்த நபர் ஆந்திரா மாநிலத்தில் உள்ள புட்டபர்த்தி சாய்பபா கோவிலுக்கு சென்று வந்ததால் அவருக்கு கொரோனா நோய் தொற்று வந்துள்ளது. இந்நிலையில் அந்த நபருடன் வந்த மேலும் மூன்று பேரும் மற்றும் அவரது உறவினர்கள் 8 பேரும் தனிமைபடுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.கொரோனா தொற்று ஏற்பட்ட நபரின் நல்லூர் கிராமம்,  கிருஷ்ணகிரியில் பாலாஜி நகர், பழையபேட்டை, காவேரிப்பட்டினம் சன்முக செட்டி தெரு, நல்லதம்பி செட்டி தெரு உள்ளிட்ட பகுதிகளுக்கு மக்கள் பயணிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.  பச்சை மண்டலமாக உள்ள கிருஷ்ணகிரியில் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் அது பச்சை மண்டலம் என்ற பெருமை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது,  இதுவரை  பாதிக்கப்பட்டவருடன் சென்ற 3 பேர், உறவினர்கள் 8 பேரை தனிமைப்படுத்தி கண்காணிக்கப்பட்டு வருவதாக அம்மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் .  
 

click me!