புளுகு மூட்டைகளை அவிழ்த்துவிடும் தினகரன் கீழ்த்தரமாக நடந்து கொள்கிறார்….கே.பி.முனுசாமி ஆவேசம்..

Asianet News Tamil  
Published : Mar 13, 2017, 07:53 AM ISTUpdated : Sep 19, 2018, 02:41 AM IST
புளுகு மூட்டைகளை அவிழ்த்துவிடும் தினகரன் கீழ்த்தரமாக நடந்து கொள்கிறார்….கே.பி.முனுசாமி ஆவேசம்..

சுருக்கம்

K.P.Munusamy press meet

புளுகு மூட்டைகளை அவிழ்த்துவிடும் தினகரன் கீழ்த்தரமாக நடந்து கொள்கிறார்….கே.பி.முனுசாமி ஆவேசம்..

அப்பல்லோ மருத்துமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதா தன்னைப் பார்த்து கையசைத்ததாக , டி.டி.வி.தினகரன் அவிழ்த்துவிடும் பொய் மூட்டைகளை யாரும் நம்ப மாட்டார்கள் என்றும் இதிலிருந்து அவர் எவ்வளவு கீழ்த்தரமானவர் என்பது அனைவருக்கும் புரியும் என்றும் முன்னாள் அமைச்சர் கே,பி,முனுசாமி தெரிவித்தார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த 2007 ஆம் ஆண்டுமாநிலங்களவை உறுப்பினராக இருந்த தினகரனை இனிமேல் நாடாளுமன்றத்துக்கு செல்லக்கூடாது என ஜெயலலிதா உத்தரவிட்டதாக கே.பி.முனுசாமி தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து சதி செய்ததாக குற்றம்சாட்டப்பட்டு 2011 ஆம் ஆண்டு கட்சியயை விட்டே விரட்டப்பட்டவர்தான் தினகரன் என்றும் கே.பி,முனுசாமி தெரிவித்தார்.

அப்படிப்பட்ட ஒருவரை ஜெயலலிதா பார்த்து கையசைத்தார் என்று தினகரன் கூறுவது கடைந்தெடுத்த பொய் என கூறினார்

செப்டம்பர் 25 ஆம் தேதி அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், ஜெயலலிதா அந்த நேரத்தில் அபாய கட்டத்தில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த செப்டம்பர் 25 ஆம் தேதி ஜெயலலிதா தன்னைப் பார்த்து கையசைத்தாக தெரிவித்திருப்பது அவர் எவ்வளவு கீழ்த்தரமானவர் என்பதை காட்டுகிறது  என குற்றம்சாட்டினார்.

நடந்த 2014 நாடாளுமன்றத் தேர்தலில் தினகரன் அதிமுக  கூட்டணிக்கு உதவியதாக  கூறியிருப்பதும் பொய் எனத் தெரிவித்த கே,பி,முனுசாமி, அந்த ஆண்டு அதிமுக யாருடனும் கூட்டணி வைக்கவில்லை என கூறினார்.

மருத்துவமனையில் இருந்து  வெளியே வந்த உடன் தினகரனுக்கு பதவி கொடுக்கிறேன் என்று  ஜெயலலிதா சொன்னதாக மீண்டும் மீண்டும் அவர் பொய் சொல்லி வருவதால் ஜெயலலிதாவின் ஆன்மா அவரை மன்னிக்காது என்று கே.பி. முனுசாமி கூறினார்.

 

 

PREV
click me!

Recommended Stories

ட்விஸ்ட்.! உதயநிதி எடுத்த சாட்டை.! பென் நிறுவனம் கலைப்பு?! மீண்டும் திமுகவில் மாமன் - மச்சான் அதிகார மோதல்.!
JJayalalithaa: எனது இடத்தில் இவர்தான்.! ஜெயலலிதா கை காட்டிய ஒருவர்.! யார் தெரியுமா?