ஜெ.மர்ம மரணம் குறித்து அமைச்சர் விஜய பாஸ்கருக்கு அனைத்து தகவல்களும் தெரியும்… கே.பி.முனுசாமி அதிரடி…

Asianet News Tamil  
Published : Mar 07, 2017, 08:14 AM ISTUpdated : Sep 19, 2018, 02:09 AM IST
ஜெ.மர்ம மரணம் குறித்து அமைச்சர் விஜய பாஸ்கருக்கு அனைத்து தகவல்களும் தெரியும்… கே.பி.முனுசாமி அதிரடி…

சுருக்கம்

K.P.Munusamy press meet

ஜெ.மர்ம மரணம் குறித்து அமைச்சர் விஜய பாஸ்கருக்கு அனைத்து தகவல்களும் தெரியும்… கே.பி.முனுசாமி அதிரடி…

ஜெயலலிதாவின்  மர்ம மரணம் குறித்த அனைத்து தகவல்களும் அமைச்சர் , விஜய பாஸ்கருக்கு தெரியும் அவர்  விசாரணைக் கமிஷன் முன்பாக ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டிய கட்டாயமான சூழ்நிலை விரைவில் வரும் என்றும் ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சென்னை கிரீன்வேய்ஸ் சாலையில் உள்ள ஓபிஎஸ் இல்லத்தில் செய்தியாளர்களிட்ம் பேசிய கே.பி.முனுசாமி, தமிழகத்தில் ஜெயலலிதா ஆட்சி நடைபெறுவதாக கூறும் எடப்பாடி பழனிசாமி  அவரது மரணத்தில் உள்ள சந்தேகங்களை தீர்க்கும் வகையில்  விசாரணைக் கமிஷன்  அமைக்க வேண்டும் என தெரிவித்தார்.

அப்படி ஒரு விசாரணை கமிஷன் அமைக்கும் போது சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் கட்டாயம்  விசாரணை நடத்த வேண்டும் என, குறிப்பிட்ட கே.பி.முனுசாமி ஏனென்றால் ஜெ,மரணம் குறித்த அனைத்து  தகவல்களும் விஜய பாஸ்கருக்கு தெரியும் என்றார்.

சுகாதாரத் துறை அமைச்சர் என்ற முறையில் விஜய பாஸ்கர்தான், ஜெயலலிதாவின் உடல் நிலை முன்னேற்றம் குறித்து மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். ஆனால் அவரோ அப்பல்லோ மருத்துவமனையில் உட்கார்ந்து கொண்டு டீ, வடை சாப்பிட்டுக் கொண்டிருந்தார் என கே.பி.முனுசாமி குற்றம் சாட்டினார்.

தர்மத்தின் படி நடக்க வேண்டிய விஜயபாஸ்கர், அதர்மத்தின் படி நடந்து கொள்கிறார் என்றும், அவரை விசாரித்தால் எல்லா உண்மைகளும் வெளி வரும் என்றும் கே.பி.முனுசாமி தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

Semmalai Admk: செம்மலையை தட்டி தூக்கியதா தவெக? “கற்பூரம் கரையலாம்; கட்சி கரையலாமா?” என வேதனையுடன் வெளியேரும் செம்மலை.!
அவ்வளவு தரங்கெட்டவன் நான் இல்லை.. திமுக, அதிமுக கூட்டணிக்கு பேச்சுவார்த்தை..? ரஜினி பரபரப்பு விளக்கம்