கொங்குநாடு என்பது மிஸ்டேக்... மத்திய அமைச்சர் எல்.முருகன் விளக்கம்..!

By Thiraviaraj RMFirst Published Jul 16, 2021, 5:08 PM IST
Highlights

எல். முருகன் குறித்த பா.ஜ.கவின் செய்திக்குறிப்பில் கொங்குநாடு எனக் குறிப்பிடப்பட்டிருந்ததைத் தொடர்ந்து, கொங்குநாடு கோரிக்கையை பா.ஜ.க மற்றும் அதன் ஆதரவு அமைப்புகள் முன்னெடுத்து வந்தன. 
 


கொங்குநாடு என அமைச்சரவை மாற்றத்தின்போது வெளியிடப்பட்ட தனது விவரகுறிப்பில் ‘கொங்குநாடு’ என இடம்பெற்று இருந்தது தட்டசுப்பிழையே என மத்திய அமைச்சர் எல்.முருகன் விளக்கமளித்துள்ளார்.

 

`கொங்குநாடு அரசியல்' தமிழ்நாட்டில் சூடுபிடித்து வந்தது. சட்டசபைத் தேர்தல் முடிவுகளில் இருந்து கொங்கு மண்டல அரசியல் சமூகவலைதளங்களில் கடுமையாக விவாதிக்கப்பட்டு வருகிறது. மத்திய இணை அமைச்சராக பொறுப்பேற்ற எல். முருகன் குறித்த பா.ஜ.கவின் செய்திக்குறிப்பில் கொங்குநாடு எனக் குறிப்பிடப்பட்டிருந்ததைத் தொடர்ந்து, கொங்குநாடு கோரிக்கையை பா.ஜ.க மற்றும் அதன் ஆதரவு அமைப்புகள் முன்னெடுத்து வந்தன. 

இந்நிலையில் கொங்குநாடு விவகாரம் குறித்து மத்திய அமைச்சர் எல்.முருகன் கூறுகையில், கொங்குநாடு என அமைச்சரவை மாற்றத்தின்போது வெளியிடப்பட்ட தனது விவரகுறிப்பில் ‘’ கொங்குநாடு’ என இடம்பெற்று இருந்தது தட்டசுப்பிழை’ எனத் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டை உடைத்து கொங்குநாடு என்ற புதிய மாநிலத்தை உருவாக்க வேண்டும் என பாஜக தலைவர்கள் சிலர் கூறி வரும் நிலையில் எல்.முருகனின் இந்த விளக்கம் பாஜகவினரை அதிர்சியில் ஆழ்த்தியுள்ளது. 

click me!