
ஒரு காலத்தில் தென் மாவட்டங்கள் மற்றும் வட மாவட்ட அமைச்சர்களின் ஆதிக்கத்துடன் இருந்த சட்டப்பேரவை தற்போது கொங்கு மண்டலத்தை சேர்ந்த கவுண்டர் ஜாதி அமைச்சர்களின் கோட்டையாகியுள்ளது. தி.மு.க ஆட்சியில் இருக்கும் போது முதலமைச்சர் கருணாநிதிக்கு தளபதிகளாக சட்டப்பேரவையில் செயல்பட்டவர்கள் துரைமுருகன், பொன்முடி மற்றும் எ.வ.வேலு. இவர்கள் மூன்று பேருமே வட மாவட்டங்களை சேர்ந்தவர்கள். அதாவது பொன்முடி விழுப்புரத்தை சேர்ந்தவர். துரைமுருகன் வேலூரை சேர்ந்தவர். எ.வ.வேலு திருவண்ணாமலையை சேர்ந்தவர்.
இவர்களில் ஓ.பி.எஸ் தேனி மாவட்டத்தை சேர்ந்தவர், நத்தம் விஸ்வநாதன் திண்டுக்கல்லை சேர்ந்தவர் வைத்திலிங்கம் தஞ்சையை சேர்ந்தவர்.