கொங்கு நாடு: அத்தைக்கு மீசை முளைத்தால் பிறகு பார்க்கலாம். டோட்டலாக அடித்து நொறுக்கிய மாஜி அமைச்சர் ஜெயக்குமார்

By Ezhilarasan BabuFirst Published Jul 15, 2021, 11:52 AM IST
Highlights

அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தெரிவித்துள்ளதாக கூறிய அவர். நாளைக்கு அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் கூட்டத்தில் அதிமுக சார்பாக தான் பங்கேற்பதாக கூறினார். 

கொங்குநாடு விவகாரம் என்பது அத்தைக்கு மீசை முளைத்தால் பின்னர் பார்த்துக் கொள்ளலாம் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார். அதாவது மத்திய அரசு திமுக மற்றும் அவர்களது தோழமை கட்சிகளால் தொடர்ந்து ஒன்றிய அரசு என்று அழைக்கப்பட்டு வருக்கிறது. அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கொங்கு நாடு தனி மாநிலமாக பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு வலுசேர்க்கும் வகையில் தமிழக பாஜகவினர் தொடர்ந்து சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவிட்டு வருகின்றனர். 

இது இரு கட்சியினருக்கும் இடையே மோதலாக உருவெடுத்துள்ளது.  திமுக ஆட்சி பொறுப்பை ஏற்றது முதல் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் மத்திய அரசை, ஒன்றிய அரசு என்று அழைத்து வருகின்றனர். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துவரும் பாஜகவினர் பிரிவினைவாதத்தின் நோக்கத்தோடு ஒன்றிய அரசு என்ற பதம் பயன்படுத்தப்படுவதாக குற்றம் சாட்டியுள்ளது. இந்நிலையில் திமுகவினருக்கு பதிலளிக்கும் வகையில் கொங்குநாடு தனி மாநிலமாக உருவாக வேண்டும் என்ற கோரிக்கையை பாஜக ஆதரவாளர்கள் முகநூலில் பரப்பி வருகின்றனர். இது தமிழகத்தின் மிகப்பெரிய விவாதப் பொருளாக உருவெடுத்துள்ளது. இந்நிலையில், முன்னாள் முதலமைச்சர் கர்மவீரர் காமராஜரின் 119 வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது நினைவு இல்லத்தில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மரியாதை செலுத்தினார். 

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், கல்வித்தரத்தை தமிழகத்தில் உயர்த்த வேண்டும் என்று பல்வேறு நடவடிக்கைகளை காமராஜர் மேற்கொண்டார். என்று அவர் புகழ் மங்காது இருக்கும். மேலும் மேகதாது விவகாரம் குறித்து அதிமுக ஏற்கனவே தனது நிலைப்பாட்டை அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தெரிவித்துள்ளதாக கூறிய அவர். நாளைக்கு அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் கூட்டத்தில் அதிமுக சார்பாக தான் பங்கேற்பதாக கூறினார். கொங்குநாடு விவகாரத்தில் அதிமுக எந்த ஒரு கருத்தும் சொல்லாத நிலையில் அதன் கருத்து என்ன என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், அத்தைக்கு மீசை முளைக்கட்டும் பின்னர் பார்த்துக்கொள்ளலாம் என்று பதிலளித்தார். 
 

click me!