கொங்கு தளபதி... செந்தில் பாலாஜியின் ஆளுமை யாருக்குமே இல்லையா..? கொதிக்கும் கோவை உடன்பிறப்புகள்..!

By Thiraviaraj RMFirst Published Jan 17, 2022, 6:00 PM IST
Highlights

கோவை மாவட்டத்துக்கு ஆளுமையான தலைவர்களே இல்லை என்ற வேதனையில் அமைச்சர் செந்தில்பாலாஜி அங்கு பொறுப்பாளராக திமுக தலைமை நியமித்தது.

கோவை மாவட்டத்தில் தற்போது உடன் பிறப்புகளால் 'கொங்கு தளபதி’ என்று அடைமொழியுடன் அழைக்கப்படும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அங்கு எதிர்ப்பு அலையும் வீசி வருகிறது. கோவை மாவட்டத்துக்கு ஆளுமையான தலைவர்களே இல்லை என்ற வேதனையில் அமைச்சர் செந்தில்பாலாஜி அங்கு பொறுப்பாளராக திமுக தலைமை நியமித்தது. ஆனால் அவரது செயல்பாடுகளில் உடன்பிறப்புகள் மிகவும் நொந்து போயிருக்கிறார்கள் கூறப்படுகிறது.

டிசம்பர் மாதம் உதயநிதி ஸ்டாலின் கோவை விசிட்டின் போதும் நிர்வாகிகள் யாரையும் விமான நிலையத்திற்கு வரக்கூடாது என்று கூறிவிட்டார் செந்தில் பாலாஜி. கோவை திமுகவில் கரூர்காரர்களின் ஆதிக்கமே எங்கும் பரவிக் கிடக்கிறது என்று கைகொட்டி சிரிக்கின்றனர் கோவை உடன்பிறப்புகள். அதிமுக நிர்வாகிகள் சிலர் நம்மிடம், ‘’கொங்கு மண்டலத்தில் திமுகவினருக்கு ஆளுமையான தலைவர்கள் இல்லை. அதை நோக்கித்தான் செந்தில் பாலாஜி காய் நகர்த்தி வருகிறார். மற்றபடி இங்கு கட்சியை வளர்க்க ஆக்கபூர்வமான மாற்றங்கள் நடைபெறவில்லை.

கோவையில் பிரதான பிரச்சினையை அதிகாரிகள், இப்போது வரை அதிமுக மற்றும் வேலுமணிக்கு விசுவாசமாக இருப்பது தான். அந்தப் பிரச்சினை இப்போது வரை சரியாகவில்லை. இதைக்கேட்டால் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்று அனைத்து பதவிகளையும் பிடிக்க வேண்டும். அப்படி பிடித்தால் மாறிவிடும் என்று கூறுகிறார் செந்தில் பாலாஜி. அவர் திமுகவிற்கு வந்த பிறகு கரூரில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் தோல்வி தான் கிடைத்தது. அதற்காக இவர்களை முழுமையாக குற்றம் சாட்டினால் ஏற்றுக் கொள்வார்களா? செந்தில் பாலாஜி திமுக நிர்வாகிகளுடன் எதுவுமே  பேசுவதில்லை. நாங்கள் கொடுக்கும் நியாயமான கோரிக்கைகளைக் கூட அவர் கண்டுகொள்வதில்லை.

 மேலும் டாஸ்மாக் கடைகள் எல்லாம் செந்தில்பாலாஜியின் கரூர் திமுக கொடுக்கப்பட்டிருக்கிறது. அவர்களுக்கு தான் கிடைத்திருக்கிறது. எங்களுக்கு கிடைக்கவில்லை. அவர்கள் பெற்ற டெண்ட்ரை பேரம் பேசி வாங்க வேண்டிய சூழ் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். ஒரு கட்சிக்கு பூத் கமிட்டி அமைப்பது தான் முக்கியம். உதயநிதி தலைமையில் கூட்டம் நடத்திய பிறகு கோவை மாவட்டத்தில் உள்ள சுமார் 3000 பூத்களுக்கு தலா 10,000 சென்று இருக்கிறது. அதனால் அவர்கள் செந்தில் பாலாஜியின் தீவிர ஆதரவாளர்கள் ஆகிவிடுவார்கள். 

செந்தில் பாலாஜியை தாண்டி இன்னொரு தலைவர் உருவாகி விடக்கூடாது என்பதுதான் திட்டம். கொடிசியா மைதானம் அருகே ஒரு பெரிய வீட்டை செந்தில் பாலாஜி வாங்கி விட்டார். புதிய கார் வாங்கி விட்டார். கோவை தளபதி என்ற அடைமொழியை செந்தில்பாலாஜி ஆதரவாளர்கள் முன்னெடுத்துவிட்டனர். உண்மையில் வேலுமணியுடன் அதிமுகவில் முன்பு இருந்தவர்கள் திமுகவுக்கு வந்து விட்டார்கள். இப்போது திமுகவில் அவர்களுக்கு தான் மரியாதை. வேலுமணியை புகழ்ந்தவர்கள் இப்போது உதயநிதியை புகழ்ந்து பேசுகிறார்கள்.

கட்சி நிர்வாகிகளை விமானம் நிலையம் வராதீர்கள் என்று சொல்லிவிட்டு வேலுமணிக்கு விசுவாசமாக இருந்தவர்களை மட்டும் மேடை ஏற்றுவது எந்த விதத்தில் நியாயம்? என்று உள்ளுர் உடன்பிறப்புகள் புலம்பித் தள்ளுகிறார். செந்தில் பாலாஜியின் செயல்பாடுகளுக்கு எதிர்ப்பு இருந்தாலும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் திமுக உள்கட்சித் தேர்தல் வருவதால் உடன்பிறப்புகள் மனதுக்குள்ளேயே கொண்டிருக்கின்றனர். எல்லாம் முடிந்ததும் புகார்களை அனுப்ப திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. 


கோவைக்கு கொங்கு தளபதியாக செந்தில் பாலாஜி செயல்படுவது ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றால் சேலத்திற்கு மலைக்கோட்டை மாவீரனை அதாவது கே.என்.நேரு அவர்களை ஏற்றுக் கொண்டதான் செயல்படுகிறார்கள். கடந்த தேர்தல்களில் திமுகவிற்கு எதிரான அலை கடுமையாக வீசிய போதும் ஒரு தொகுதிகளில் திமுக வென்றது. தற்போது அதிமுகவுக்கு எதிரான அலை வீசிய போதும் கோவையில் ஒரு தொகுதி அதிமுக ஜெயிக்க முடியவில்லை. அப்போது எங்கே போனார்கள் உடன்பிறப்புகள்? என்ற குரலும் ஓங்கி ஒலிக்க தான் செய்கிறது.

click me!